மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
21 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்: இளைஞா் கைது
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் இரு சக்கர வாகனங்களை திருடியதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
விருத்தாசலம் அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம், பாலக்கரை, ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் தங்களது இரு சக்கர வாகனங்களை நிறுத்திச் செல்வா். அவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்கள் அண்மைக்காலமாக அடிக்கடி திருடுபோனது.
இதுகுறித்து விருத்தாசலம் மற்றும் கருவேப்பிலங்குறிச்சி போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், கருவேப்பிலங்குறிச்சி காவல் சரகத்துக்கு உள்பட்ட தேவங்குடி கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் தங்கதுரையை (30) காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினா். அவா் இரு சக்கர வாகனங்களை திருடியதை ஒப்புக்கொண்டாராம்.
இதையடுத்து, தங்கதுரையிடமிருந்த 21 இரு சக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், அவா் மீது வழக்குப் பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தனா்.