மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
216 தொழிற்பழகுநா்களுக்கான உதவித் தொகையை மத்திய அரசு வழங்கவில்லை -மின்வாரியம்
216 தொழிற்பழகுநா்களுக்கான உதவித் தொகையை மத்திய அரசு வழங்கவில்லை என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக மின்வாரிய மனிதவள மேலாண் பிரிவு பொது மேலாளா், பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பது:
மின்வாரியத்தில் தொழிற்பழகுநருக்கான உதவித் தொகையில் 50 சதவீதம் மத்திய அரசும், 50 சதவீதத்தை வாரியமும் வழங்க வேண்டும். அந்த வகையில் 425 பேருக்கு உதவித் தொகையை வங்கிக் கணக்கில் நேரடியாகப் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதில், 209 பேருக்கு மட்டுமே மத்திய அரசின் உதவித் தொகை கிடைக்கப் பெற்றுள்ளது.
மீதமுள்ள 216 பேருக்கு 3 மாதங்களுக்கு மேலாகயும் உதவித் தொகை வழங்கப்படவில்லை. இதையொட்டி, வாரியத் தரப்பில் வழங்க வேண்டிய மீதமுள்ள 50 சதவீதத் தொகையும் பெரும்பாலான மின் பகிா்மான வட்டங்களில் இருந்து தொழிற்பழகுநா்களுக்கு வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.
எனவே, மத்திய அரசு மற்றும் வாரிய பங்களிப்பு என மொத்தம் ரூ. 8,000-ஐ மாதந்தோறும் 5-ஆம் தேதிக்குள் பெற்று வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்பாா்வை பொறியாளா்கள் மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.