செய்திகள் :

24-வது முறையாக டிரம்ப் பேச்சு! கூட்டத்தொடரில் மோடி பதிலளிக்க வேண்டும்! - காங்கிரஸ்

post image

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியதாக 24-வது முறையாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளதற்கு, வரும் கூட்டத்தொடரில் பிரதமர் மோடி கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் கூறியுள்ளார்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது கடந்த மே 7ல் 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலை இந்திய ராணுவம் மேற்கொண்டதையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. போர் தொடங்கி 4 நாள்களில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

வர்த்தகத்தை முன்வைத்து இந்தியா, பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தி போரை நிறுத்தியதாக பல்வேறு சந்தர்ப்பங்களில் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இதுபற்றி காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது.

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலின்போது 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், தனது தலையீட்டால் போர்நிறுத்தப்பட்டது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது மீண்டும் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தின்போது 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகிறார். மே 10 முதல் இன்று வரை அமெரிக்க அதிபர் டிரம்ப், குறிப்பிட்ட இரண்டு விஷயங்களை மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.

ஒன்று, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்தியதாகவும் இரண்டாவது, இந்தியாவும் பாகிஸ்தானும் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய விரும்பினால் போர் நிறுத்தப்பட வேண்டும் என்று நிபந்தனை விதித்ததாகவும் இதுவரை 24 முறை கூறியுள்ளார்.

இப்போது, போரில் 5 போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக அவர் புதிய தகவலை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவிருக்கிறது. பிரதமர் மோடி அவரது மௌனத்தைக் கலைக்க வேண்டும். வேறு எந்தவொரு தலைவரும் இப்படி இருக்கமாட்டார். கூட்டத்தொடரில் காங்கிரஸும் எதிர்க்கட்சிகளும் இதுதொடர்பாக சிறப்பு விவாதம் நடத்த கோரிக்கை விடுக்கும். டிரம்ப் கூறியது பற்றி பிரதமர் கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும். எங்களுக்கு மாற்று வீரர் தேவையில்லை. பிரதமர்தான் பதிலளிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை மறுநாள்(ஜூலை 21) தொடங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Congress demands PM Modis statement in Parliament on Trumps five jets shot down claim and india - pakistan war

இதையும் படிக்க | இந்தியா - பாக். மோதலில் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன: மீண்டும் டிரம்ப்!

ஏர் இந்தியா விபத்து: என்ன நடந்தது தெரியுமா? - அமெரிக்க விசாரணை அமைப்பின் தகவல்கள்

அகமதாபாத் நகரில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தின் விசாரணையில் புதிய திருப்பம் ஏற்படலாம் என்று அமெரிக்காவை சேர்ந்த விமான விபத்து விசாரணை அமைப்பான ’என்.டி.எஸ்.பி.’ பதிவிட்டுள்ளது.அகமதாபாத்தில் கடந்த ஜூ... மேலும் பார்க்க

உ.பி.யில் மதுபோதையில் உயிருள்ள பாம்பை விழுங்கிய நபர்!

உத்தரப் பிரதேசத்தில் மதுபோதையில் உயிருள்ள பாம்பை விழுங்கிய நபரால் பரபரப்பு நிலவியது. உத்தரப் பிரதேச மாநிலம், பண்டாவில் அசோக்(35) என்பவர் மதுபோதையில், தனது வீட்டிற்குள் நுழைந்த உயிருள்ள பாம்பை விழுங்கி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் குண்டு பாய்ந்து பெண் பலி !

ஜம்மு-காஷ்மீரில் கிராம பாதுகாப்பு காவலரின் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்ததில் பெண் ஒருவர் பலியானார். ஜம்மு-காஷ்மீரின் அரகம் கிராமத்தில் தனது வீட்டை விட்டு வெளியே ராகேஷ் குமாரின் மனைவி புஷ்பா தே... மேலும் பார்க்க

முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் வீட்டில் திருட்டு !

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் வீட்டில் மர்ம நபர்கள் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிர மாநிலம், புணே மாவட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கே... மேலும் பார்க்க

"மேக் இன் இந்தியா" என்ற பெயரில் ஒன்றுகூடுகிறோமே தவிர உற்பத்தி செய்யவில்லை: ராகுல்

இந்தியாவில் சிறு தொழில்முனைவோர் உற்பத்தி செய்ய விரும்புகிறார்கள் ஆனால் அவர்களுக்கு ஆதரவான கொள்கை இல்லை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கூறினார். இதுதொடர்பாக ராகுல் வெளியிட்ட எக்ஸ் பதிவில... மேலும் பார்க்க

மதசார்பற்ற சக்திகளை ராகுல் ஒன்றிணைக்க வேண்டுமே தவிர பிரிக்கக் கூடாது: ஜான் பிரிட்டாஸ்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் ஒரே நோக்கம் மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைப்பதாக இருக்க வேண்டுமே தவிர, குழப்பத்தையும் பிரிவினையையும் உருவாக்கக்கூடாது என்று சிபிஐ(எம்) தலைவர் ஜான் பிரிட்... மேலும் பார்க்க