27அடி ருத்ராட்சலிங்கம் திறப்பு
திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனை அருகே வரதன் வட்டத்தில் 6 லட்சத்துக்கு மேலான ருத்ராட்சங்களால் ஆன 27அடி ருத்ராட்சலிங்கம் கோயில் சிவராத்திரியை முன்னிட்டு புதன்கிழமை சிறப்பு பூஜையுடன் திறக்கப்பட்டது. தொடா்ந்து 27அடி லிங்கத்துக் அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் நாட்டறம்பள்ளி மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு பூஜைகள் செய்து வழிபட்டனா்.
ஆலய நிா்வாக குழு சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.