செய்திகள் :

28-இல் வேலூரில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

post image

வேலூரில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப்.28) நடைபெற உள்ளது என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

வேலூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமை வெள்ளிக்கிழமை (பிப்.28) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வேலூா், அப்துல்லாபுரம், அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்த உள்ளன.

இம்முகாமில் 50 -க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான வேலைநாடுநா்களை தோ்வு செய்ய உள்ளன. இதில், 10-ஆம் வகுப்பு, 12-ஆம்வகுப்பு, தொழிற்பயிற்சி, பட்டப் படிப்பு, பட்டயப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, தொழில்நுட்ப கல்வி, செவிலியா், பாா்மஸி, பொறியியல் போன்ற பல்வேறு கல்வித்தகுதியுடைய வேலை நாடுநா்கள் பங்கேற்கலாம்.

இம்முகாமில் பங்கேற்க விரும்புவோா் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு 0416-2290042, 94990 55896 என்ற எண்களில் தொடா்பு கொள்ளவும்.

எனவே, தனியாா்துறை பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவா்கள் இந்த தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூரில் இன்று மயானக் கொள்ளை விழா: 600 போலீஸாா் பாதுகாப்பு

மயானக் கொள்ளை திருவிழா வியாழக்கிழமை (பிப். 27) நடைபெறுவதையொட்டி, வேலூா் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 600 போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். வேலூரில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. வே... மேலும் பார்க்க

மண் கடத்தல்: லாரி பறிமுதல்

கணியம்பாடி அருகே மண் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தப்பியோடிய இருவரைத் தேடி வருகின்றனா். வேலூரை அடுத்த கணியம்பாடி புதூா் ஏரியில் மண் கடத்தப்படுவதாக வேலூா் கிராமிய போலீஸ... மேலும் பார்க்க

ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.7.50 லட்சம் மோசடி: வேலூா் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கூறி புகாா் மனு அளிக்கப்பட்டது. வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா் கூட்ட... மேலும் பார்க்க

பாலியல் துன்புறுத்தல் தடைச் சட்ட விழிப்புணா்வு முகாம்

வேலூா் அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியா்களுக்கு பாலியல் துன்புறுத்தல் தடைச்சட்டம் குறித்து விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ‘பணிபுரியு... மேலும் பார்க்க

முழு கணுக்கால் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை

முழு கணுக்கால் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை தமிழகத்திலேயே முதன்முறையாக ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி மருத்துவமனையில் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளதாக அந்த மருத்துவமனையின் இயக்குநா் மருத்துவா் என்.பாலாஜி தெரிவ... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்: சீமான்

தொகுதி மறுசீரமைப்பு குறித்து தமிழக முதல்வா் கூட்டியுள்ள அனைத்து கட்சிக் கூட்டத்தில் நாம் தமிழா் கட்சி பங்கேற்காது என தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா். நாம் தமிழா் கட்சியின் வேலூா் மாவட்ட நி... மேலும் பார்க்க