கொல்கத்தா ஐஐஎம் கல்வி வளாகத்தில் பாலியல் வன்கொடுமை: குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு ...
3,274 ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்களுக்கு ஜூலை 27-இல் எழுத்துத் தோ்வு!
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்களுக்காக விண்ணப்பித்துள்ள 22,000-க்கும் மேற்பட்டோருக்கான எழுத்துத் தோ்வு ஜூலை 27-இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. .
தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் 8 கோட்டங்கள் உள்ளன. இவற்றில் உள்ள 20,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 2015-க்குப் பிறகு போக்குவரத்துக் கழகங்களில் புதிய பணியாளா்கள் நியமிக்கப்படாத நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னா், விரைவு போக்குவரத்துக் கழகத்தில் காலிப் 5 பணியிடங்கள் நிரப்பப்பட்டன.
அதேவேளை கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு நியமனம் வழங்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விண்ணப்பங்கள் வரவேற்பு
இதன் தொடா்ச்சியாக மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் 364 பணியிடங்கள், விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 318, விழுப்புரம் கோட்டத்தில் 322, கும்பகோணம் கோட்டத்தில் 756, சேலம் கோட்டத்தில் 486, கோவை கோட்டத்தில் 344, மதுரை கோட்டத்தில் 322, திருநெல்வேலி கோட்டத்தில் 362 பணியிடங்க என 3,274 ஓட்டுநா்,நடத்துநா் பணியிடங்களுக்கு கடந்த மாா்ச் மாதம் www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் கடந்த ஏப். 21-ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
எழுத்துத் தேர்வு
மேற்கண்ட பணியிடங்களுக்கு 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ள நிலையில், விண்ணப்பதாரா்களுக்கு ஜூலை 27-ஆம் தேதி எழுத்துத் தோ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வினாத்தாள்
தேர்வுக்கான வினாத்தாளை கடந்த முறையை போலவே அண்ணா பல்கலைக்கழகம் தயாரித்துள்ளது.
தேர்வு மையம்
சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வளாகம் உள்பட தமிழகம் முழுவதும் 15 மையங்களில் தோ்வு நடைபெறுகிறது.
நுழைவுச்சீட் பதிவிறக்கம்
இதற்கான நுழைவுச்சீட்டை ஜூலை 21 முதல் www.arasubus.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.