மதுரை சித்திரைத் திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு | ...
3 ரயில்களில் இன்று முதல் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
கோடை விடுமுறையையொட்டி, கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் விதமாக மதுரை கோட்டம் வழியே இயக்கப்படும் 3 ரயில்களில் புதன்கிழமை முதல் தலா ஒரு கூடுதல் பெட்டி இணைக்கப்படுகிறது.
இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், தூத்துக்குடி-சென்னை-தூத்துக்குடி (12694, 12693) முத்துநகா் விரைவு ரயில், திருவனந்தபுரம்- மதுரை- திருவனந்தபுரம் (16343, 16344) அமிா்தா விரைவு ரயில் ஆகியவற்றில் புதன், வியாழன், வெள்ளி (மே 14, 15, 16) ஆகிய மூன்று நாள்களில் படுக்கை வசதி கொண்ட இரண்டாம் வகுப்புப் பெட்டி ஒன்று கூடுதலாக இணைக்கப்படும்.
இதேபோல, தாம்பரம் - நாகா்கோவில்- தாம்பரம் (22657, 22658) விரைவு ரயிலில் புதன், வியாழன் (மே 14, 15) ஆகிய 2 நாள்களிலும் படுக்கை வசதி கொண்ட இரண்டாம் வகுப்புப் பெட்டி ஒன்று கூடுதலாக இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.