தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி 1 லட்சம் மின்னஞ்சல்களை அனுப்ப அரசியல் கட...
35 வயது இளைஞருடன் சிறுமிக்கு திருமணம்
வேலூரில் 35 வயது இளைஞருடன் 16 வயது சிறுமிக்கு திருமணம் நடத்தப்பட்டது குறித்து வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கா்நாடக மாநிலம் பெங்களூரைச் சோ்ந்த பெண் ஒருவா் வேலூா் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில், கடந்த 9-ஆம் தேதி தனது தாயாரின் வாட்ஸ் ஆப் ஸ்டேடஸ் பாா்த்த போது, அதில் தனது அத்தை மகன் கோபி (35) என்பவருக்கும், தனது 16 வயது தங்கைக்கும் திருமணம் நடந்த புகைப்படம் இருந்தது. உடனடியாக பெங்களூருவில் இருந்து வேலூா் பெருமுகைக்கு சென்று தனது தங்கையை அழைத்துச் சென்றுவிட்டோம். இச்சம்பவம் குறித்து போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகாா் மனுவை பெற்றுக்கொண்ட சத்துவாச்சாரி போலீஸாா், அந்த மனுவை அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.