3ஆவதும் பெண் குழந்தை: மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற கணவர்
3ஆவதும் பெண் குழந்தையை பெற்றெடுத்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், பர்பானி மாவட்டத்தில், கங்காகேட் நாகாவில் வசித்து வருபவர் உத்தம் காலே (32). இவருடைய மனைவி மைனா. இத்தம்பதிக்கு ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் அண்மையில் 3ஆவதாகவும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
காந்தி அல்லாத காங்கிரஸ் தலைவர்களை காந்தி குடும்பம் மதித்ததில்லை: மத்திய அமைச்சர் கருத்து!
வியாழன் இரவு, இதுபோன்ற ஒரு வாக்குவாதத்தில் மனைவி மீது பெட்ரோலை ஊற்றி உத்தம் காலே தீ வைத்தார். இதில் அலறியடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்த மைனாவை, தீயை அணைத்து அங்கம்பக்கத்தினர் காப்பாற்ற முயன்றனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மைனா உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் அவர் வழியிலேயே பலியானார். இதுதொடர்பாக மைனாவின் சகோதரி அளித்த புகாரின்படி, உத்தம் காலே கைது செய்யப்பட்டதாக கங்காகேட் காவல் நிலைய அதிகாரி தெரிவித்தார். 3ஆவதும் பெண் குழந்தை பெற்றதால் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் மகாராஷ்டிரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.