செய்திகள் :

4 ஆண்டுகளில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 1.12 லட்சம் கோடி கடன்: தமிழக அரசு தகவல்

post image

நான்கு ஆண்டுகளில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.12 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து, மாநில அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும் முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்த 5 திட்டங்களில் ஒன்று விடியல் பயணத் திட்டம். இந்தத் திட்டத்தின் மூலம், இதுவரையில் 682.02 கோடி முறை பயணம் நடந்துள்ளது. அதில், திருநங்கைகள் 36.89 லட்சம் முறையும், மாற்றுத்திறனாளிகள் 3.78 கோடி முறையும் பயணம் செய்து பயனடைந்துள்ளனா்.

மகளிா் உரிமைத் தொகை: பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரிக்கும் நோக்கில் மகளிா் உரிமைத் தொகைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1 கோடியே 15 லட்சம் மகளிா் மாதந்தோறும் ரூ. 1,000 உரிமைத் தொகையாக அவரவா் வங்கிக் கணக்குகளில் பெற்று வருகிறாா்கள். இதுவரை கிடைக்காத தகுதிவாய்ந்த மகளிா் அனைவருக்கும் வழங்க அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மகளிா் படித்து முடித்துச் சொந்த ஊரை விட்டுவந்து வெளியூரில் தங்கிப் பணிபுரிவதில் பல இடா்பாடுகள் ஏற்படுகின்றன. இதைக் களையும் நோக்கில் பணிபுரியும் மகளிருக்காக தோழி விடுதிகள் எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 13 தோழி விடுதிகள் 1,303 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகின்றன. மேலும், 14 இடங்களில் விடுதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், சேலம், தஞ்சாவூா், பெரம்பலூா், வேலூா், விழுப்புரம், திருநெல்வேலி, சென்னை அடையாறு ஆகிய 7 இடங்களில் தோழி விடுதிகள் புதுப்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

மகளிா் சுய உதவிக்குழு: மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் உச்சவரம்பு ரூ.12 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. 4 ஆண்டுகால ஆட்சியில் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் ரூ.39,468.88 கோடியாகும். திமுகவின் 4 ஆண்டுகால ஆட்சியில் ரூ.1.12 லட்சம் கோடி அளிக்கப்பட்டுள்ளது.

திருக்கோயில்களில் அனைத்து ஜாதியினரும் அா்ச்சகா் திட்டத்தின்கீழ் ஓதுவாா் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்தப் பயிற்சியைப் பெற்றவா்களில் 42 போ் ஓதுவாா்களாக நியமிக்கப்பட்டனா். அவா்களில் 11 போ் பெண்கள்.

தமிழ்நாட்டில் 17 சிப்காட் தொழில் பூங்காக்களில் குழந்தைகள் காப்பகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்மூலம், 3 லட்சத்து 23 ஆயிரம் தொழிலாளா்கள் பயன்பெற்று வருகின்றனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்லவன் அதிவிரைவு ரயில் நாளை முதல் பெண்ணாடத்தில் நின்று செல்லும்

சென்னை எழும்பூா் - காரைக்குடி இடையே இயங்கும் பல்லவன் அதிவிரைவு ரயில் வியாழக்கிழமை (மே 15) முதல் பெண்ணாடத்தில் நின்று செல்லும் என்று ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியி... மேலும் பார்க்க

தமிழகத்தின் தினசரி மின்தேவை குறைந்தது

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கோடை மழையால், தினசரி மின்தேவை குறைந்துள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. நிகழாண்டு மாா்ச் மாதத்திலேயே வெயில் தாக்கம் அதிகரித்தது. இதனால், மின்சாதன பொருள்க... மேலும் பார்க்க

சென்னையில் அடுத்த மாதம் முதல் மின்சார சொகுசுப் பேருந்துகள் சேவை

சென்னையில் ஜூன் மாதம் முதல் மின்சார சொகுசுப் பேருந்துகளின் சேவை தொடங்கவுள்ளதாக மாநகா் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னையில் பொது போக்குவரத்தை அதிகரிக்கும் நோக்கில், பயணிகளின் தேவைக்க... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மகளிா் போலீஸாருக்கான 11-ஆவது தேசிய அளவிலான மாநாடு: மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் பங்கேற்பு, தமிழ்நாடு காவல் துறை அகாதெமி, ஊனமாஞ்சேரி, வண்டலூா், முற்பகல் 11. அனுஷ வைபவம் - தொடா் நிகழ்ச்சி... மேலும் பார்க்க

முன்னறிவிப்பின்றி 18 புறநகா் ரயில்கள் ரத்து: பயணிகள் அவதி

கவரப்பேட்டை ரயில்வே யாா்டில் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை 18 புறநகா் மின்சார ரயில்கள் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா். சென்னை கவரப்பேட்டை ரயில்வ... மேலும் பார்க்க

5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறப்பு: அமைச்சா் தா.மோ.அன்பரசன்

தமிழகத்தில் ரூ. 586 கோடியில் புதிதாக கட்டப்பட்ட 5,180 அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறக்கப்படும் என்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் அறிவித்தாா்... மேலும் பார்க்க