புத்தாண்டு புதிய வெற்றிகளுக்கு வித்திடட்டும்! -முதல்வர் ஸ்டாலின்
4-ஆம் நாள் ஆட்டம் முடிவில் ஆஸி. 333 ரன்கள் முன்னிலை!
மெல்போர்ன் : பாக்ஸிங் டே டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 333 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 369 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதில், நிதீஷ் குமார் ரெட்டி சதமடித்ததன் காரணமாக இந்திய அணி கௌரவமான ஸ்கோரை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இப்போது அந்த அணி 333 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடர்கிறது.
இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணிக்கு விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தாலும், 10-ஆவது விக்கெட்டுக்கு களத்தில் இணைந்த நாதன் லியன் - ஸ்காட் போலாண்ட் இணை இந்திய பந்துவீச்சை தாக்குப்பிடித்து ஆட்டமிழக்காமல் நின்றது. இதன் காரணமாக, அந்த அணி இரண்டாவது இன்னிங்சில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்துள்ளது.
கடைசி மற்றும் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் நாளை இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலிய பந்துவீச்சை தாக்குப்பிடித்து ஆட்டமிழக்காமல் இருந்தால் 4-ஆவது டெஸ்ட் போட்டியும் டிராவில் முடிய வாய்ப்புள்ளது.
இன்னொருபுறம், இந்திய அணி விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றி பெறும் முனைப்பில் ஆஸ்திரேலியா உள்ளதால் நாளைய ஆட்டம் கடும் சவாலானதாக இந்திய பேட்ஸ்மென்களுக்கு இருக்கப் போகிறது.