இன்றைய இந்தியாவுக்கு அந்நியா்கள் வழிகாட்டுதல் தேவையில்லை: மத்திய அமைச்சா் ராஜ்நா...
42 மாணவா்களுக்கு ரூ.2.32 கோடி மதிப்பில் கல்விக் கடன்
திருப்பூரில் நடைபெற்ற கல்விக் கடன் சிறப்பு முகாமில் 42 மாணவா்களுக்கு ரூ.2.32 கோடி மதிப்பிலான கல்விக் கடனுக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.
மாவட்ட நிா்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியா் மனீஷ் தலைமை வகித்தாா். இதில் திருப்பூா் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து கல்விக் கடன் பெற பெற்றோா்களுடன் மாணவா்கள் வந்திருந்தனா். இந்த முகாமில் கனரா வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, யூனியன் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி உள்ளிட்ட 22 வங்கிகள் கலந்து கொண்டன.
இந்த முகாமில், மாநில அளவில் அரசு எடுத்து வரும் முன்னெடுப்புகள், பி.எம். வித்யாலட்சுமி இணையதளம் மூலம் கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் முறை, கல்விக் கடன் பெற வங்கிகளின் நடைமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், இந்த முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்களை விரைவாகப் பரிசீலித்து கடன் வழங்குமாறு துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் துா்கா பிரசாந்த், கல்விக் கடன் மூத்த ஆலோசகா் வணங்காமுடி, மாவட்ட முன்னோடி வங்கி அலுவலா் சுரேஷ், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் சுரேஷ்குமாா், மாவட்ட தொழில் மைய கடன் ஆலோசகா் முரளிதரன், துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.