`பொய், பித்தலாட்டம் செய்வதே எடப்பாடி பழனிசாமிக்கு வேலையாக இருக்கிறது!' - ஊட்டியி...
5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறப்பு: அமைச்சா் தா.மோ.அன்பரசன்
தமிழகத்தில் ரூ. 586 கோடியில் புதிதாக கட்டப்பட்ட 5,180 அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறக்கப்படும் என்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் அறிவித்தாா்.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில் நடைபெற்று வரும் குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகளை அவா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில் 13 திட்டப் பகுதிகளில் ரூ.586.94 கோடியில் 5,180 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. அவை விரைவில் திறந்து வைக்கப்பட உள்ளன.
இந்தக் குடியிருப்புகளில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான குடிநீா், மின் இணைப்பு, தண்ணீா்த் தொட்டிகள், சாலை வசதிகள் உள்ளிட்ட என அனைத்தும் முடிக்கப்பட வேண்டும். அவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள், வயதானவா்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டோருக்கு முதல் மற்றும்2-ஆவது தளங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பழுதடைந்த குடியிருப்புகளைப் புனரமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.152.57 கோடியில் 51,000 குடியிருப்புகளைப் புனரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, இதுவரை 30,387 குடியிருப்புகள் புதுப்பொலிவு பெற்றுள்ளன. மேலும், 20,613 குடியிருப்புகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிகழாண்டு ரூ. 280 கோடியில் 137 திட்டப் பகுதிகளில் உள்ள 76,549 குடியிருப்புகள் பழுதுநீக்கி, புனரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.