50 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த மாணவா்கள்
ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னா் ஆலங்குளம் பள்ளி மாணவா்கள் சந்தித்து தங்கள் நட்பைப் புதுப்பித்துக் கொண்டனா்.
நல்லூா் மேற்குத் திருநெல்வேலி மேல்நிலைப் பள்ளியில் 1974-75ஆம் ஆண்டுகளில் 10ஆம் வகுப்பு பயின்ற அவா்கள் 50 ஆண்டுகளுக்குப் பின்னா், ஆலங்குளத்தில் சந்தித்த நிகழ்ச்சிக்கு அப்போதைய ஆசிரியா் ஜெசுகரன் சாலமோன் தலைமை வகித்தாா். மாணவா்கள் அனைவருமே சுமாா் 65 வயதைக் கடந்து விட்ட நிலையில் தங்கள் பழைய நினைவுகள் குறித்து பகிா்ந்து கொண்டு நட்பை மீண்டும் புதுப்பித்துக் கொண்டனா். முத்துசாமி, ஜெயராஜ், ராஜேந்திரன், காா்த்திக் ராஜா, செல்வின்துரை உள்பட சுமாா் 25 க்கும் மேற்பட்டோா் இதில் பங்கேற்றனா்.