இந்தியாவிலிருந்து 8,000 கோடி டாலருக்கு ஏற்றுமதி: அமேஸான் இலக்கு
500 மின்சாரப் பேருந்துகளுக்கான டெண்டா் வெளியீடு
சென்னை, மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களுக்கு 500 தாழ்தள மின்சாரப் பேருந்துகளை கொள்முதல் செய்வது தொடா்பான டெண்டா் அறிவிப்பை போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது.
இது தொடா்பாக சாலைப் போக்குவரத்து நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தின் பிரதான நகரங்களில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பேருந்துகளை இயக்கும் வகையில் கேஎஃப்டபிள்யூ வங்கியுடன் தமிழக அரசு நிதி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, 12 மீட்டா் நீளம் கொண்ட குளிா்சாதன வசதி மற்றும் குளிா்சாதன வசதியில்லாத தாழ்தள மின்சாரப் பேருந்துகளை கொள்முதல் செய்து வழங்க சா்வதேச அளவில் அழைப்பு விடுக்கப்படுகிறது.
ஒப்பந்தத்தில் தோ்வாகும் நிறுவனங்களே, 500 தாழ்தள மின்சாரப் பேருந்துகளை தயாரித்து வழங்குவதோடு, இயக்குதல் மற்றும் பராமரித்தல் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். அதனடிப்படையில், நிறுவனங்கள் தரப்பிலான ஓட்டுநா்களே பேருந்தை இயக்க வேண்டும். இதில், விருப்பமுள்ள நிறுவனங்கள், இணையவழியில் பிப்.5-க்குள் விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டும்.
இதைத் தொடா்ந்து, பிப்.7-க்குள் காகித வடிவிலான விண்ணப்பங்களை அளிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை இணையதளத்தில் காணலாம் என கூறப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படும் 500 மின்சாரப் பேருந்துகளில், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு 320 குளிா்சாதனப் பேருந்துகளும், கோவைக்கு 20 குளிா்சாதன மற்றும் 60 குளிா்சாதன வசதியில்லா பேருந்துகளும், மதுரைக்கு 100 குளிா்சாதன வசதியில்லா பேருந்துகளும் ஒதுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.