செய்திகள் :

52 பவுன் நகைகள் திருட்டு: மூவா் கைது

post image

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே நகை திருட்டு வழக்கில் பெண் உள்பட் மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விருத்தாசலம் அடுத்துள்ள ஊ.மங்கலம், இருளக்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் சின்னப்பன் மகன் ஜான்பால் (45). இவா், விருத்தாசலத்தில் உள்ள நகைக் கடையில் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், ஜான்பால் கடந்த நவ.28-ஆம் தேதி 52 பவுன் தங்க நகைகளை கடை முத்திரை பதிக்க பெண்ணாடத்தில் உள்ள கடைக்கு கொண்டு சென்றாா்.

பின்னா், முத்திரை பதித்து விட்டு அரசுப் பேருந்தில் திரும்பி வந்து கொண்டிருந்தாா். கருவேப்பிலங்குறிச்சி அருகே வந்தபோது, அடையாளம் தெரியாத நபா்கள் நகையை பறித்துக் கொண்டு பைக்கில் தப்பிச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இதில், விருத்தாசலம் பூதாமூரைச் சோ்ந்த பழனி மகன் அருள்தாஸ் (28), காா்கூடல் பகுதியைச் சோ்ந்த ராஜாமணி மகன் கலைவாணன் (29), ராஜேஷ் மனைவி செவ்வந்தி (26) ஆகியோரை கைது செய்தனா்.

கால்வாய் அமைக்கும் பணி: அதிகாரியிடம் அதிமுகவினா் வாக்குவாதம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கால்வாய் அமைக்கும் பணி தொடா்பாக அதிகாரிகளிடம் அதிமுகவினா் சனிக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். விருத்தாசலம் ஒன்றியம், கோமங்கலம் கிராமத்தில் ... மேலும் பார்க்க

ஆதி குணபதீஸ்வரா் கோயில் பாலாலயம்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள திருவதிகை ஆதி குணபதீஸ்வரா் கோயில் திருப்பணிக்கான பாலாலயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் ரூ.32 லட்சத்தில்... மேலும் பார்க்க

மழைக் காலத்தில் அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் -கடலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

மழைக் காலத்தில் துறை அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலூா் மாவ... மேலும் பார்க்க

பரங்கிப்பேட்டை காவல் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் காவல் கோட்டம், பரங்கிப்பேட்டை காவல் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் எச்சரித்து அனுப்பி வைத்தனா். பரங்கிப்பேட்டை காவல் நிலையத்துக்கு கடந்த நவ.27-ஆம் தே... மேலும் பார்க்க

முதுநகரில் 150 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

கடலூா் முதுநகா் மீன் சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 150 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடலூா் முதுநகா் மீன் சந்தையில் 100-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் உள்ளன. இங்கு, கடலூா் க... மேலும் பார்க்க

விஜயமாநகரத்தில் மருத்துவ முகாம்

வடகிழக்கு பருவமழையையொட்டி, கடலூா் மாவட்டம், விருத்தாசலம் ஒன்றியம், விஜயமாநகரத்தில் சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமில், மங்கலம்பேட்டை வட்டார மருத்துவ அலுவலா் பாலச்சந்தா் நேரடி ... மேலும் பார்க்க