''எங்களுக்கு குப்பை வேண்டாம்!" - டிரெண்டாகும் #BoycottMajorRavi ஹாஷ்டேக் - பின்...
`90 நாள்களுக்கு கறுப்பு நிற உடைகளை அணியுங்கள்' - தாய்லாந்து அரசு பரிந்துரை
தாய்லாந்து, இந்திய சுற்றுலா பயணிகளுக்கு பிரியமான இடமாக திகழ்ந்து வருகிறது. 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி தாய்லாந்தின் முன்னாள் ராணி சிரிகித் 93 வயதில் உயிரிழந்தார்.
இதனையடுத்து 30 நாள்கள் தேசிய துக்க காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கறுப்பு நிற உடைகளுக்கான கோரிக்கை அதிகரித்து வருகிறது.
தாய்லாந்து நாட்டில் துக்க காலத்தில் பொதுவாக கறுப்பு மற்றும் வெள்ளை நிற உடைகள் அணியப்படும். அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஒரு வருடம் கறுப்பு நிற உடைகளில் பணியாற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு 90 நாள்களுக்கு கறுப்பு மற்றும் வெள்ளை நிற உடைகள் அணிய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது கட்டாய சட்டம் அல்ல, ஆனால் அரசு ஊழியர்கள் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.
அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது, இந்திய சுற்றுலா பயணிகளும் அரண்மனைகள் மற்றும் அரசாங்க இடங்களைப் பார்வையிடும் போது கறுப்பு அல்லது வெள்ளை நிற உடைகள் அணிய பரிந்துரைக்கப்படுகின்றது. அங்குள்ள பிரபல நைட் கிளப்புகளுக்கு தடை இல்லை, ஆனால் நாட்டின் வழிகாட்டுதல்களை புரிந்துகொண்டு நடந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.





















