இடைநீக்கம் செய்யப்பட்ட அதிஷி உள்பட ஆம் ஆத்மி எல்எல்ஏக்கள் பேரவைக்கு வெளியே தா்ணா
Aadhi: ``பேய் பயம் இருக்கு... அஜித், விஜய் சாருடன் வில்லனாக நடிக்க ஆசை..'' - நடிகர் ஆதி
'ஈரம்', 'வல்லினம்', 'குற்றம் 23' படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கத்தில், ஆதி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'சப்தம்'.
'ஈரம்' படத்திற்குப் பிறகு மீண்டும் ஆதி - அறிவழகன் இணைந்திருக்கின்றனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். அமானுஷ்ய புலனாய்வாளர் (paranormal investigator) அடிப்படையாகக் கொண்ட ஹாரர் திரில்லர் திரைப்படமான இது நாளை (பிப் 28) திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. 'மரகத நாணயம்' இரண்டாம் பாகத்திற்காக அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது.

இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசியிருக்கும் நடிகர் ஆதி, "தெலுங்கில் கொஞ்ச நாள் நடித்துக் கொண்டிருந்தேன். தமிழ், தெலுங்கு என்றெல்லாம் நான் பார்க்கவில்லை. நல்ல படம் எங்கு கிடைத்தாலும், பண்ணுவேன். இனி தமிழில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி இருக்கிறேன். தமிழில் இனி என்னை அடிக்கடி பார்க்கலாம்.
இந்தப் படத்தின் ட்ரெய்லரை பாலய்யா சார் பார்த்துப் பாராட்டினார். இந்திய அமானுஷ்ய புலனாய்வாளர் பற்றிய திரைப்படம் இது. இதற்காக கௌரவ் திவாரி (paranormal investigator) என்பவரின் வாழ்க்கை, வீடியோக்களை நிறையப் பார்த்துக் கற்றுக்கிட்டேன். இது ஹாரர் திரில்லர் திரைப்படம் இது, எங்களுக்கும் அனுமாஷ்யங்கள் குறித்த பயம் இருக்கும். ஷூட்டிங்கின் போதே எல்லாருக்கும் கொஞ்சம் பயம் இருந்தது. போகப் போகப் பழகிடுச்சு.

'ஈரம்' படம் பார்க்கும்போது எனக்கு பயமில்லை. ஆனால், அமானுஷ்ய புலனாய்வாளராக இந்தப் படத்தில் நடித்திருப்பதால் போய், அமானுஷ்ய பயன் வந்தது. கடவுள் சக்தி இருப்பதுபோல் பேய், அமானுஷ்யம் இருப்பதாக கொஞ்சம் நம்பிக்கை இந்தப்படத்திற்குப் பிறகு வந்துவிட்டது.
வில்லனாக நடிக்கவும் ஆசை இருக்கு. கதை நல்லா இருந்தா நடிப்பேன். யார்கூட வேண்டுமென்றாலும் வில்லனாக நடிப்பேன். கதைதான் முக்கியம். அஜித், விஜய் சாருடன் வில்லனாக நடிக்க ஆசை இருக்கு" என்று பேசியிருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
