Army Chief: ``அமெரிக்க அதிபருக்கு கூட தெரியாது" - மாணவர்களிடம் மனம் திறந்து உரைய...
``AC ரூம் கூட கொடுக்கமாட்டாங்க!'' -இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் பெண்கள் கிரிக்கெட் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி இன்று நவி மும்பையில் நடக்கிறது. இந்தப் போட்டிக்கு முன்பாக இந்திய பெண்கள் அணியின் முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா ஒரு காலத்தில் இந்திய பெண்கள் எந்த நிலையில் இருந்ததென சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை பகிர்ந்திருந்தார்.

இந்திய அணி இதற்கு முன்பு 2005, 2017 ஆகிய ஆண்டுகளில் கிரிக்கெட் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. இதில் 2005 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் இந்திய அணியின் கேப்டன் அஞ்சும் சோப்ரா என்பது குறிப்பிடத்தக்கது.
அஞ்சும் சோப்ரா பேசியதாவது, '2005 உலகக்கோப்பையை தென்னாப்பிரிக்காவில் ஆடியிருந்தோம். 2002 இல் நாங்கள் தென்னாப்பிரிக்காவுக்கு சென்றிருந்தோம். அங்கு ஒரு டெஸ்ட் போட்டியில் வென்றிருந்தோம். அதனால் எங்களுக்கு அந்த பிட்ச்களை பற்றி கொஞ்சம் தெரியும்.
அந்த உலகக்கோப்பையில் எங்களின் மனநிலை வேறாக இருந்தது. அப்போது எங்களுக்கு இறுதிப்போட்டியை வெல்ல வேண்டும் எண்ணமோ தீர்க்கமோ இல்லை. ஏனெனில், அதுவரை நாங்கள் இறுதிப்போட்டிக்கெல்லாம் சென்றதே இல்லை. ஒரு இறுதிப்போட்டி எப்படியிருக்கும் என்றே தெரியாது. அரையிறுதியில் நியூசிலாந்தை வென்ற போது எங்களுக்கு அந்த வெற்றியை எப்படி கொண்டாட வேண்டும் என்று கூட தெரியவில்லை.

பெரிதாக கொண்டாடக்கூட இல்லை. அப்படியே ஹோட்டலுக்கு சென்றுவிட்டோம். இன்னொன்றை சொல்லவா? நாங்கள் இறுதிப்போட்டிக்கு செல்லும் வரை ஒரு அறைக்கு மூன்று பேர் என எங்களுக்கு Non AC அறைகளைத்தான் கொடுத்திருந்தார்கள். இறுதிப்போட்டிக்கு சென்ற பிறகுதான் எங்களுக்கு நல்ல விசாலமான AC அறைகளை கொடுத்தார்கள். இப்போது பெண்கள் கிரிக்கெட் நிறையவே மாறிவிட்டது.' என்றார்.














