செய்திகள் :

Ajith: நவ. 27இல் முடியும் 'குட் பேட் அக்லி' படப்பிடிப்பு; அஜித்தின் அடுத்த ப்ளான் என்ன தெரியுமா?

post image
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ்திருமேனியின் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனைத் தொடர்ந்தது ஆதிக் ரவிச்சந்திரனின் 'குட் பேட் அக்லி' படத்திலும் நடித்து வருகிறார். இப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

அஜித் குமார்

திரைப்படங்கள் தவிர்த்து, கார், பைக் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் கூட அவர் கார் பந்தயத்தில் விரைவில் கலந்துகொள்ள இருப்பதாக இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் சம்மேளனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இந்நிலையில் நவம்பர் 27ஆம் தேதி முதல் அஜித்தின் ரேஸிங் அணி தீவிர பயிற்சியைத் தொடங்க இருக்கிறது என்று அஜித்தின் 'venus motorcycle tours' நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இதுதொடர்பாக 'venus motorcycle tours' வெளியிட்டிருந்த இன்ஸ்டாகிராம் பதிவில், "பல்கேரியாவில் நடக்கும் 'குட் பேட் அக்லி' படப்பிடிப்பில் தனது காட்சிகளை நவம்பர் 24ஆம் தேதியுடன் நிறைவு செய்கிறார் அஜித். அதன் பிறகு மீண்டும் ரேஸிங்கிற்கு திரும்புகிறார். நவம்பர் 27 ஆம் தேதி முதல் அஜித்தின் ரேஸிங் அணி தீவிர பயிற்சியைத் தொடங்கும்" என்று தெரிவித்திருக்கிறது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/PesalamVaanga

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

``மணி சாரின் அடுத்த படத்திற்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன்..!'' - IFFI 2024 விழாவில் மனிஷா கொய்ராலா

2024-ம் ஆண்டுக்கான இந்திய சர்வதேச திரைப்பட விழா (International Film Festival of India 2024) கோவாவில் நடந்து வருகிறது.மத்திய அரசு சார்பில், நடத்தப்படும் இந்த இந்திய சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் 28-ம... மேலும் பார்க்க

Jolly O Gymkhana Review: 'எப்பயாவது லாஜிக் இல்லனா ஓகே; எப்பவுமேவா?'- எப்படியிருக்கு ஜாலியோ ஜிம்கானா?

பவானி (மடோனா செபாஸ்டின்), அவரின் தாய் செல்லம்மா (அபிராமி), தங்கைகள் இரண்டு பேர், தாத்தா (ஒ.ஜி.மகேந்திரன்) ஆகியோர் சேர்ந்து 'வெள்ளைக்காரன் பிரியாணி' என்கிற பெயரில் கடன் வாங்கி, ஹோட்டல் தொடங்குகிறார்கள்... மேலும் பார்க்க

Amaran: "'ஹே மின்னலே' பாட்ட பாடுறதுக்கு முன்னாடி ஜி.வி என்கிட்ட சொன்னது இதான்!" - ஹரிசரண் பேட்டி

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களெங்கும் `ஹே மின்னலே' பாடலின் வாசம்தான் நிறைந்திருக்கிறது.மேஜர் முகுந்த் வரதராஜானுக்கும் இந்துவுக்கு இடையேயான பெருங்காதலை இந்த பாடல்தான் அழகாக விவரிக்கும். நம் செவிகளுக்கு மிகவும்... மேலும் பார்க்க

Coolie : ``லோகேஷ் கனகராஜ் `Gen Z' கிடையாது; ஆனால்... " - நாகர்ஜுனா

சர்வதேச திரைப்படத் திருவிழா கோவாவில் நவம்பர் 20 -ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.நடிகர் நாகர்ஜூனாவும் அவரின் மனைவியும் நடிகையுமான அமலாவும் இந்த திரைப்பட திருவிழாவில் பங்கேற்றிருக்கின்றனர். இந்த நிக... மேலும் பார்க்க

பராரி விமர்சனம்: சாதிப் பெருமிதம், ஒடுக்குமுறையின் கோரமுகம் அரசியல் பேசும் பராரி படமாக வென்றதா?

திருவண்ணாமலையைச் சேர்ந்த ராஜாபாளையம் கிராமத்தில், சாதிப் பிரிவினை நிலவுகிறது. மாறன் (அரிசங்கர்) மற்றும் அவரின் சமூக மக்களும் தினமும் ஊர்த்தெரு ஆட்களால் பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர்.அந்த கிராமத்திலுள்ள... மேலும் பார்க்க