எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்கலாம்: சென்னை உ...
Allu Arjun: `ஒருவர் இறந்தது துரதிஷ்டவசமான ஒன்றுதான் ஆனால்...’ - அல்லு அர்ஜுன் பற்றி ராஷ்மிகா
'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் பிரீமியர் ஷோ பார்க்க, கடந்த டிசம்பர் 4ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு குடும்பத்துடன் சென்று ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி பாஸ்கர் என்பவரின் மனைவி ரேவதி உயிரிழந்ததை தொடர்ந்து அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அல்லு அர்ஜூனுக்கு ஆதரவாகத் திரைப்பிரபலங்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், " இப்போது நான் பார்ப்பதை என்னால் நம்ப முடிவில்லை. 'புஷ்பா-2' முதல் காட்சியின்போது ஒருவர் இறந்தது துரதிஷ்டவசமான ஒன்று. வருத்தமான ஒன்றும் கூட. ஆனாலும் எல்லா பழிகளையும் ஒருவரின் மீது சுமத்துவது வருத்தமளிக்கிறது” என்று பதிவிட்டிருக்கிறார்.