Allu Arjun: ரசிகர் உயிரிழந்த விவகாரம்; அல்லு அர்ஜுன் கைதா? காவல் நிலையம் கூட்டிச் சென்ற போலீஸ்!
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான 'புஷ்பா 2' திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதி வெளியானது. இத்திரைப்படம் வெளியான அன்று, ஹைதராபாத்திலுள்ள சந்தியா திரையரங்கில் பிரீமியர் ஷோவுக்கு அல்லு அர்ஜுன் திடீரென சென்றபோது ரசிகர்கள் பெருமளவில் கூடினர்.
அப்போது, 39 வயதான ரேவதி என்ற பெண் ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவருடைய மகனும் கூட்ட நெரிசலில் சிக்கி, பலத்த காயத்துடன் தீவிர சிகிச்சையில் பெற்றுவருகிறார்.
அதைத்தொடர்ந்து, இந்த செய்தியறிந்த அல்லு அர்ஜுன், உயிரிழந்தவருக்கு இரங்கல் தெரிவித்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்க ரூ. 25 லட்சம் நிதியளிப்பதாகவும் தெரிவித்தார். மறுபக்கம், அல்லு அர்ஜுன் மீது தெலுங்கனா போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதோடு, சந்தியா திரையரங்க நிர்வாகிகளையும் போலீஸார் கைதுசெய்தனர். இத்தகைய சூழலில், தெலுங்கானா போலீஸார் இந்த வழக்கு தொடர்பாக அல்லு அர்ஜுனைக் கைதுசெய்து, சிக்கட்பள்ளி காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...