செய்திகள் :

Amaran: ``நாமும் லிங்குசாமிகிட்ட நஷ்ட ஈடு கேட்கலாம் போலையே!'' ஃபன் செய்த வசந்த பாலன்!

post image
`அமரன்' திரைப்படத்தினால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 1.1 கோடி நஷ்ட ஈடு கேட்டிருக்கிறார் சென்னையை சேர்ந்த மாணவர் வாகீசன்.

அமரன் படத்தின் ஒரு காட்சியில் சாய் பல்லவி ஒரு காகிதத்தில் அவரின் தொலைப்பேசி எண்ணை எழுதி அதனை சிவகார்த்திகேயனிடம் கொடுப்பார். `அந்த காகிதத்தில் இருந்த எண் என்னுடையது. அந்த எண்ணை சாய் பல்லவியின் எண் என நினைத்துக் கொண்டு பலரும் என்னை தொடர்பு கொண்டு தொந்தரவு செய்கிறார்கள்' என குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்திருக்கிறார் வாகீசன்.

Sandaikozhi

இதே போன்றொரு அனுபவம் இயக்குநர் வசந்த பாலனுக்கும் நேர்ந்திருக்கிறதாம். சண்டைக்கோழி படத்தின் ப்ரோமோஷன் யுக்தியால் தனக்கு ஏற்பட்ட இதுபோன்ற அனுபவம் பற்றி நகைச்சுவையாக பதிவிட்டிருக்கும் இயக்குநர் வசந்த பாலன், `` இயக்குநர் லிங்குசாமியால் எனக்கு அப்படியொரு சோதனை ஏற்பட்டது. சண்டக்கோழி திரைப்படம் வெளியீட்டுக்கு முந்தைய நாள் சிறப்புக்காட்சியும் முதல் நாள் முதல் காட்சியும் பார்த்த நண்பர்கள் "சண்டக்கோழி திரைப்படம் பத்து ரன்!" என்று பாராட்டி எனக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தனர்.

நான் லிங்குவிற்கு படம் பார்த்த நண்பர்கள் இப்படி பாராட்டி செய்தி அனுப்பியுள்ளார்கள், மாபெரும் வெற்றிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் என்று குறுஞ்செய்தி அனுப்பினேன். லிங்குவும் நன்றி தெரிவித்து பதிலிட்டான். அச்சமயத்தில் நான் மதுரையில் வெயில் திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்தேன். அன்று பரத், பாவனா சம்மந்தமான காட்சி. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை ஒட்டியுள்ள ஜனநெருக்கடியான பகுதிகளில் நடத்த திட்டமிட்டு வேலைகளில் இறங்கியிருந்தேன்.

வசந்தபாலன்

நானும் கேமராவும் மறைவான இடங்களில் இருந்து கொண்டு என் அலைபேசி வாயிலாக உதவியாளர்களுக்கும் பரத்திற்கும் உத்தரவுகள் தந்தவண்ணம் இருந்தேன். காலை 7 மணியிலிருந்தே சம்மந்த சம்மந்தமில்லாத எண்களிலிருந்து என்னை அழைத்து நீங்க தான் நடிகர் விஷாலா? இயக்குநர் லிங்குசாமியா? என்றும் இடைவிடாத போன் அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன.என் படப்பிடிப்பு வேலையவே செய்ய முடியாத வண்ணம் இடைவிடாத அழைப்புகள். ஏண்டா என் நம்பர்ல எல்லாரும் கூப்பிடுறீங்க என்று டென்சனில் ஒரு அழைப்பாளரிடம் கத்தி விட்டேன்.

தினத்தந்தி விளம்பரத்தில் உங்கள் நம்பர் போட்டுருக்கு சார் என்றார் ஒருவர். தினத்தந்தி வாங்கி பார்த்தால் சண்டக்கோழி திரைப்பட விளம்பரத்தில் நான் லிங்குசாமிக்கு அனுப்பிய குறுஞ்செய்தியைப் பதிவிட்டு கீழே என் அலைபேசி நம்பரைப் போட்டிருந்தார்கள். கடுப்பாகி போனை அணைத்து விட்டெறிந்தேன்.

அன்று படப்பிடிப்பு முடிந்து இரவு லிங்குசாமியிடம் ஏண்டா இப்படி போட்டீங்க? என்றேன். படத்தைப் பற்றிய பாராட்டுகளை இப்படி புதிய விளம்பர உத்தி வாயிலாக விளம்பரம் செய்ய முயன்றோம் என்று பதிலுரைத்தான்.

இயக்குநர் லிங்குசாமி

மனதிற்குள் வெங்காய உத்தி என்று திட்டினேன். படம் மாபெரும் வெற்றி என்கிற மகிழ்ச்சியில் இருந்தான் எதற்கு இந்த நேரத்தில் என் சங்கடங்களை அவனிடம் பகிர வேண்டுமென அதைப் பற்றி பேசாமல் வாழ்த்துகளைப் பகிர்ந்து விட்டு அலைபேசியை அணைத்தேன்.

நீண்ட இரவு முழுக்க நீங்க விஷாலா லிங்குசாமியா என்று தொலைபேசி அழைப்புகள் தொடர்ந்து ஒரு மாதம் வரை வந்த வண்ணம் இருந்தது. அந்த நம்பரை மாற்றிய பிறகு தான் தப்பித்தேன். நாமும் லிங்குவிடம் இழப்பீடு கேட்கலாம் போலயே…டே நண்பா! குடும்பத்தோடு கேன்டில் லைட் டின்னர் தா !" என பதிவிட்டிருக்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook

Lokesh: "'சொர்க்கவாசல்' படம் பாத்துட்டு அதற்கு ஏற்ற மாதிரி கைதி 2-வை மாத்தணும்" - லோகேஷ் கனகராஜ்

அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில், ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சொர்க்கவாசல்'. ஸ்வைப் ரைட் ஸ்டூடியோஸ் மற்றும் திங் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ள இப்படத்தில் செல்வரா... மேலும் பார்க்க

Emakku Thozhil Romance Review: `அரைச்ச மாவ அரைப்போமோ' - பார்த்த கதை; பழகிய திரைக்கதை; படம் எப்படி?

சினிமாவில் உதவி இயக்குநராக இருக்கும் உமாபதி (அசோக் செல்வன்), தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரியும் லியோவைக் (அவந்திகா) கண்டதும் காதல் வயப்படுகிறார். இருவரும் நண்பர்களாகி பிறகு காதலர்களாகி அந்தக் ... மேலும் பார்க்க

Surya 44: புரோமோஷன் முதல் ரிலீஸ் வரை! - 'சூர்யா 44' அப்டேட் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்

2024-ம் ஆண்டுக்கான இந்திய சர்வதேச திரைப்பட விழா (International Film Festival of India 2024) கோவாவில் நடந்து வருகிறது.மத்திய அரசு சார்பில், நடத்தப்படும் இந்த இந்திய சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் 28ம்... மேலும் பார்க்க

``வதந்திகளுக்கு தீனிப்போடுவதில் எனக்கு ஆர்வம் இல்லை'' - விமர்சனங்களுக்கு மோகினி டே பதில்

சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகர்களுக்கு அதிர்ச்சித் தரும் செய்தியாக வெளியானது அவரின் மனைவியின் விவாகரத்து அறிவிப்பு. இது தொடர்பான செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கும்போதே ஏ.ஆர்.ரஹ்மானிடம் பணியாற்றும் ப... மேலும் பார்க்க

``மணி சாரின் அடுத்த படத்திற்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன்..!'' - IFFI 2024 விழாவில் மனிஷா கொய்ராலா

2024-ம் ஆண்டுக்கான இந்திய சர்வதேச திரைப்பட விழா (International Film Festival of India 2024) கோவாவில் நடந்து வருகிறது.மத்திய அரசு சார்பில், நடத்தப்படும் இந்த இந்திய சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் 28-ம... மேலும் பார்க்க

Jolly O Gymkhana Review: 'எப்பயாவது லாஜிக் இல்லனா ஓகே; எப்பவுமேவா?'- எப்படியிருக்கு ஜாலியோ ஜிம்கானா?

பவானி (மடோனா செபாஸ்டின்), அவரின் தாய் செல்லம்மா (அபிராமி), தங்கைகள் இரண்டு பேர், தாத்தா (ஒ.ஜி.மகேந்திரன்) ஆகியோர் சேர்ந்து 'வெள்ளைக்காரன் பிரியாணி' என்கிற பெயரில் கடன் வாங்கி, ஹோட்டல் தொடங்குகிறார்கள்... மேலும் பார்க்க