செய்திகள் :

Amaran: "'ஹே மின்னலே' பாட்ட பாடுறதுக்கு முன்னாடி ஜி.வி என்கிட்ட சொன்னது இதான்!" - ஹரிசரண் பேட்டி

post image
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களெங்கும் `ஹே மின்னலே' பாடலின் வாசம்தான் நிறைந்திருக்கிறது.

மேஜர் முகுந்த் வரதராஜானுக்கும் இந்துவுக்கு இடையேயான பெருங்காதலை இந்த பாடல்தான் அழகாக விவரிக்கும். நம் செவிகளுக்கு மிகவும் பரிச்சயமான ஹரிச்சரண் தனது மென்மையான குரல் மூலம் இந்த பாடலை இன்னிசை விருந்தாய் நமக்குக் கொடுத்திருக்கிறார். ஜி.வி - ஹரிசரண் கூட்டணியிடமிருந்து `ஆரிரோ', `ஒரு பாதி கனவு' போன்ற ஹிட் பாடல்கள் வந்திருக்கின்றன. இப்போது `ஹே மின்னலே' பாடல் ஹிட்டுக்காக அவரைத் தொடர்புக் கொண்டு பேசினோம். கலகலப்பாகத் தொடங்கிய உரையாடல் `அமரன்' திரைப்படத்தைத் தாண்டி பல ப்ளாஷ்பேக் பக்கங்களையும் புரட்டியது.

அமரன் படத்தோட `ஹே மின்னலே' பாடல் ஸ்பாடிஃபை, ரீல்ஸ்னு டிரண்டிங்ல இடம் பிடிச்சு பயங்கரமாக ஹிட்டடிச்சிருக்கே...

ஆமா, இந்த வெற்றி மகிழ்ச்சியைக் கொடுக்குது. இந்த மாதிரி ஒரு ஹிட் பாடல் என்னுடைய பெயர்ல வந்து கொஞ்ச நாட்கள் ஆகிடுச்சு. அதுவும் ஒரு ஸ்பெஷலான திரைப்படத்துல இப்போ அமைஞ்சிருக்கு. சிவகார்த்திகேயன் என்னுடைய நண்பர். எனக்கும் அவருக்கு நீண்ட நெடிய தொடர்பு இருக்கு. நாங்க இரண்டு பேரும் சேர்ந்து பல இடங்களுக்குப் பயணம் பண்ணியிருக்கோம். நான் பாடல்களைப் பாடும் மேடைகள்ல அவர் ஆங்கரிங் பண்ணியிருக்காரு. பிறகு, ஜி.விகூட மற்றுமொரு பாடல் இப்போ ஹிட்டாகியிருக்கு. இந்த பாடலுக்காக என்னை ஜி.வி அழைக்கும்போதே என்கிட்ட, ` நீங்க இந்த பாடலை நல்லா பாடுவீங்கனு தெரியும். உங்களோட பெஸ்ட்டை கொடுங்க'னு சொல்லிட்டார். அப்படி உருவான பாடலுக்கு இப்போ பலரும் ரீல்ஸ் பண்ணி போடுறாங்க. ஜியோ சாவன், ஸ்பாடிஃபைனு எல்லா தளங்களிலேயும் பாடல் டாப் இடத்துல இருக்கு.

பாடகர் ஹரிசரண்

`நிமிர்ந்து நில்' திரைப்படத்திற்குப் பிறகு இப்போதான் ஜி.வி. பிரகாஷ் இசையில பாடுயிருக்கிங்க... இந்த இடைவெளி ஏன்?

ஆமா, ரொம்ப நாள் ஆச்சு. `தெய்வ திருமகள்' படத்துக்குப் பிறகு `ஹே மின்னலே' பாடல்தான் நல்ல ஹிட். ஒரு பாடகரை ஒரு பாடலுக்குத் தேர்ந்தெடுக்கிறதுல நிறைய விஷயங்கள் இருக்கு. இந்த பாடலை இந்த பாடகர் பாடினால் நல்லா இருக்கும்னு அதற்கேற்ப டியூன் போடுவார்கள். சில சமயங்கள் படத்தோட டீமும் இவங்க பாடினால் நல்லா இருக்கும்னு சொல்வாங்க. இப்படியான விஷயங்களுக்கு நான் மரியாதைக் கொடுக்கிறேன். இத்தனை வருட இடைவெளி வந்திடுச்சுதான்..ஆனால், இப்போ ஒரு சூப்பர் ஹிட் பாடல் வந்திருக்கு.

ஜி.வி. பிரகாஷை பொறுத்த வரைக்கும் அவருடைய இசையில நான் பாடல்களை முதல்ல ஒரு வடிவத்துல பாடிடுவேன். அதன் பிறகு அவர் சில இன்புட்ஸ் கொடுப்பார். அப்படி `தெய்வதிருமகள்' திரைப்படத்தோட `ஆராரிரோ' பாடல் நான் முதல்ல பாடினதுக்குப் பிறகு தந்தைக்கும் மகளுக்குமான உறவை எடுத்துரைக்கிற மாதிரியான பாடல் இதுனு சொல்லி சில பாயிண்ட் கொடுத்தார். அப்படி `ஹே மின்னலே' பாடலுக்கும் சில இன்புட்ஸ் கொடுத்தார். இந்த மாதிரியான விஷயங்கள் எனக்கு ரொம்பவே உதவியாக இருக்கும்.

`காதல்' திரைப்படத்துல உங்களுடைய முதல் பாடலை நீங்க பாடும்போது உங்களுக்கு வயது 17னு கேள்விப்பட்டோம். அந்த வயசுல சினிமாவை கரியராக எடுத்துகிட்டு அதை கையாள்கிற பக்குவம் உங்களுக்கு எப்படி வந்தது?

சொல்லப்போனால் எனக்கு அதைப் பற்றிய எண்ணமே துளியும் இல்ல. அப்போ நான் ஸ்கூல் படிச்சிட்டு இருந்தேன். 17 வயசுல கரியராக இதை பண்ணப்போறோம், ஒரு முதிர்ச்சி வேணும்னு நான் யோசிக்கவே இல்லை. அப்போ பாடல் இடம்பெறும் சூழலுக்கான எமோஷனும் தெரியாது. ஒரு டியூன் கொடுத்தால் அதுகேத்த மாதிரி பாடுவேன். பாடலாசிரியரும், இசையமைப்பாளரும் சொல்ற விஷயங்களைக் கேட்டுப்பேன். அதன் பிறகுதான் நிறைய விஷயங்கள் புரிஞ்சுகிட்டேன். ஒரு தெளிவான எண்ணத்தோட பல விஷயங்கள் பண்ணனும், சீனியர் சிங்கர்ஸ்கிட்ட பேசி நிறைய விஷயங்கள் கத்துக்கணும்னு நினைச்சேன்.

முக்கியமாக என்னுடைய ஃபேவரைட் எஸ்.பி.பி சார்கிட்ட இருந்தும் பல விஷயங்கள் கத்துகிட்டு பண்ணினேன். எல்லாமே ஒரு கற்றல் அனுபவம்தான். ஒரு பாடலைச் சாதரணமாகப் பாடிட்டு கடந்து போயிடலாம். ஆனால் அந்த பாடலுக்கு என்னென்ன விஷயங்கள் தேவை, அதை ஹிட்டாக்குறதுக்கு என்ன விஷயங்கள் பண்ணனும்னு யோசித்து பண்றது முக்கியம். அதை நான் பண்ணுவேன். தமிழ் உச்சரிப்புல நான் மிகவும் கவனமாக இருப்பேன். பாடல்கள்ல தமிழ் வரிகளை அழுத்தமாக உச்சரிச்சு பாடினால் அதை கேட்கிறதுக்கு ரொம்பவே அழகாக இருக்கும். நான் முன்னாடி பாடல் பற்றியதை தெரிஞ்சுகிட்டு அதை பாடி பயிற்சி பண்ணுவேன். அந்த பாடலுக்கான ஹீரோக்களுக்கு ஏற்ற எமோஷன்ஸ் வச்சு பாடுவேன். இப்படியான விஷயங்களைப் பின்பற்றி நான் குத்துப் பாடல்களும் பாடியிருக்கேன், மெலடி பாடல்களும் பாடியிருக்கேன்.

பாடகர் ஹரிசரண்

`காவியத்தலைவன்' ஆல்பத்துல மொத்தமாக 7 பாடல்களைப் பாடியிருந்தீங்களே.... இத்தனை பாடல்களை ஒரே பாடகருக்கு ஒரு இசையமைப்பாளர் கொடுக்கிறதுக்கு அவங்களுக்குள்ள ஒரு நம்பிக்கை வரணும். இந்த விஷயமெல்லாம் சாத்தியமானது எப்படி?

ரஹ்மான் சார் ஒரு லெஜெண்ட். அவர் ஒரு செயலை யோசித்து பண்ணினால் அதுல சரியான விஷயமாகதான் இருக்கும். பலவற்றையை கடந்து வந்தவர் அவர். வசந்த பாலன் சாரும், ரஹ்மான் சாரும் டிஸ்கஸ் பண்ணிதான் இந்த விஷயத்தைப் பண்ணினாங்க. `காவியத்தலைவன்' திரைப்படம் நாடகத்தை மையப்படுத்தியது. முன்னாடியெல்லாம் நாடகத்துல ஒரே பாடகர்தான் அனைத்துப் பாடல்களையும் பாடுவார். ஒரு ஆண்தான் அனைத்து ஆண் கதாபாத்திரங்களுக்குக் குரலை மாத்திப் பாடுவார். இந்த விஷயத்தைச் சொல்லி சித்தார்த் கேரக்டர் பாடுற எல்லா பாடல்களையும் நானே பாடுறதுக்கு முடிவு பண்ணிட்டாங்க. அப்படிதான் மொத்தமாக 7 பாடல்கள் அந்த படத்துல அமைஞ்சது.  

எதிர்பார்பே இல்லாமல் நீங்க பாடிய பாடல் எதாவது நல்ல ஹிட்டடிச்சிருக்கா?

இருக்கே...`ஐ' படத்துல `பூக்களே சற்று ஓய்வெடுங்கள்' பாடல். அந்த பாடலை இன்னொரு பெரிய சிங்கர் பாட வேண்டியது. அவருக்குத் தமிழ் உச்சரிப்பு எப்படி இருக்கணும்னு ஒரு எடுத்துக்காட்டுக்கு நான் பாடினேன். மற்றவருக்கான ஒரு ரெஃபரென்ஸ் பாடல்ங்கிறதுனால நானும் பெரிதாக மெனக்கெடல. ஆனால், அங்க மேஜிக் ஒன்னு நடந்துச்சு. ரஹ்மான் சாருக்கும், ஷங்கர் சாருக்கும் நான் பாடின வெர்ஷன் ரொம்ப பிடிச்சிருந்தது. அப்படியே அந்த வெர்ஷனை வச்சுட்டாங்க. அந்த பாடலும் சூப்பர் ஹிட்டானது. ஒரு பாடலுடைய ஹிட் விஷயம் அந்த பாடல் இடம்பெறும் திரைப்படத்தைச் சார்ந்தும் இருக்கும். 

பாடகர் ஹரிசரண்

சுயாதீன இசைக்கலைஞர்கள் இப்போ இசை துறையில கலக்கிட்டு இருக்காங்க... அவர்கள்ல நீங்க யாருடைய வேலையை அதிகமாக கவனிக்குறீங்க....

சாய் அபயங்கர் ரொம்ப அற்புதமாக வேலைகள் பண்ணீட்டு இருக்காரு. அப்புறம்.... சாம் விஷாலின் வேலைகளும் நல்லா இருக்கு. இவர்களைத் தாண்டி பால் டப்பா, அசல் கோலார், ஆஃப்ரோனு பலருடைய பாடல்களையும் நான் ரசித்துக் கேட்கிறேன். தமிழ் சுயாதீன இசைத்துறைக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. சினிமா சார்ந்து இல்லாத இசைக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கிறது மகிழ்ச்சியைக் கொடுக்குது.

Sai Abhayankar

டோலிவுட், பாலிவுட்னு மற்ற மொழி சினிமாக்களுக்கு எந்த பாடல் உங்களை அழைச்சுட்டு போனது?

`பையா' படத்தோட `துளி துளியாய்' பாடல்தான் என்னை பிற மொழி சினிமாக்களுக்கு கூட்டிட்டு போச்சு. அந்த பாடல்தான் பெரிய மேஜிக்கையும் ஏற்படுத்தியது. கார்த்திக்கிற்கு நான் பாடின பாடல்கள் அப்படியே அவருக்கு செட் ஆகுதுனும் அப்போ சொன்னாங்க. `துளி துளியாய்' பாடல் தெலுங்குலையும் வெளியானது. அதன் பிறகு நிறைய வாய்ப்புகள் எனக்கு வந்தது. இப்போ சில ஆண்டுகளாக பாலிவுட்லையும் பாடிட்டு இருக்கேன்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/JailMathilThigil

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

RJ Balaji: `யாரையும் டார்கெட் வச்சு அடிக்காதீங்க!' - ஆர்.ஜே.பாலாஜி சொல்வதென்ன?

ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் 'சொர்க்கவாசல்' எனும் திரைப்படம் வருகிற நவம்பர் 29 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.இந்தப் படத்துக்கான ட்ரெய்ல் வெளியீட்டு நிகழ்வில், 'யாரையும் டார்கெட் வச்சு அடிக்காதீங்க' என ஆர்.ஜே... மேலும் பார்க்க

Lokesh: "'சொர்க்கவாசல்' படம் பாத்துட்டு அதற்கு ஏற்ற மாதிரி கைதி 2-வை மாத்தணும்" - லோகேஷ் கனகராஜ்

அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில், ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சொர்க்கவாசல்'. ஸ்வைப் ரைட் ஸ்டூடியோஸ் மற்றும் திங் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ள இப்படத்தில் செல்வரா... மேலும் பார்க்க

Emakku Thozhil Romance Review: `அரைச்ச மாவ அரைப்போமோ' - பார்த்த கதை; பழகிய திரைக்கதை; படம் எப்படி?

சினிமாவில் உதவி இயக்குநராக இருக்கும் உமாபதி (அசோக் செல்வன்), தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரியும் லியோவைக் (அவந்திகா) கண்டதும் காதல் வயப்படுகிறார். இருவரும் நண்பர்களாகி பிறகு காதலர்களாகி அந்தக் ... மேலும் பார்க்க

Surya 44: புரோமோஷன் முதல் ரிலீஸ் வரை! - 'சூர்யா 44' அப்டேட் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்

2024-ம் ஆண்டுக்கான இந்திய சர்வதேச திரைப்பட விழா (International Film Festival of India 2024) கோவாவில் நடந்து வருகிறது.மத்திய அரசு சார்பில், நடத்தப்படும் இந்த இந்திய சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் 28ம்... மேலும் பார்க்க

``வதந்திகளுக்கு தீனிப்போடுவதில் எனக்கு ஆர்வம் இல்லை'' - விமர்சனங்களுக்கு மோகினி டே பதில்

சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகர்களுக்கு அதிர்ச்சித் தரும் செய்தியாக வெளியானது அவரின் மனைவியின் விவாகரத்து அறிவிப்பு. இது தொடர்பான செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கும்போதே ஏ.ஆர்.ரஹ்மானிடம் பணியாற்றும் ப... மேலும் பார்க்க

``மணி சாரின் அடுத்த படத்திற்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன்..!'' - IFFI 2024 விழாவில் மனிஷா கொய்ராலா

2024-ம் ஆண்டுக்கான இந்திய சர்வதேச திரைப்பட விழா (International Film Festival of India 2024) கோவாவில் நடந்து வருகிறது.மத்திய அரசு சார்பில், நடத்தப்படும் இந்த இந்திய சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் 28-ம... மேலும் பார்க்க