செய்திகள் :

America: ட்ரம்பிடம் பேசிய சுந்தர் பிச்சை; இணைப்பில் இருந்த எலான் மஸ்க் - தொடரும் நட்பு!

post image

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறை அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவரின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தவர்களில் மிக முக்கியமானவர் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்.

ட்ரம்பின் வெற்றி உரையின்போது கூட, `` எங்களிடம் ஒரு புதிய நட்சத்திரம் இருக்கிறது, அந்த நட்சத்திரம் எலான். அவர் அற்புதமான நபர். நெருங்கிய நண்பர்" எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பு அதிபராக தேர்வு செய்யப்பட்ட டொனால்ட் ட்ரம்புக்கு வாழ்த்து சொல்லும் விதமாக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ட்ரம்பிடம் பேசினார். அந்த அழைப்பில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்-கும் இருந்ததாக தகவல் வெளியானது.

எலான் மஸ்க், ட்ரம்ப்

அதைத் தொடர்ந்து ட்ரம்ப்பின் முக்கிய உரையாடல்களின் போதும் மஸ்க் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக மற்றொரு சமபவம் நடந்திருக்கிறது. கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, அதிபராக தேர்வு செய்யப்பட்ட ட்ரம்புக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டிருக்கிறார். அந்த உரையாடலின் போது டெஸ்லா நிறுவனர் மஸ்க்கும் இணைந்ததாக 'தி இன்ஃபர்மேஷன்' செய்தி வெளியிட்டிருக்கிறது.

'அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, டொனால்ட் ட்ரம்ப் பற்றி தேடினால் கமலா ஹாரிஸ் குறித்த தகவல்கள்தான் அதிகம் வருகிறது' என கூகுள் மீது எலான் மஸ்க் குற்றம் சாட்டியிருந்த நிலையில், இந்தச் செய்தி தற்போது கவனம் பெற்றிருக்கிறது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook

மகாராஷ்டிரா: 4 முறை முதல்வர்; மத்திய அமைச்சராக இருந்தவர்... சரத்பவார் படுதோல்விக்கு என்ன காரணம்?

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான மஹாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்று இருக்கிறது. இந்த கூட்டணி 226 தொகுதிகளில் வெற்றியில், முன்னிலை பெற்று இருக்கிறது. இத்... மேலும் பார்க்க

Doctor Vikatan: காலையில் வெறும் வயிற்றில் நெய் எடுத்துக்கொள்வது ஆரோக்கியமானதா?

Doctor Vikatan: என்னுடைய தோழி, தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெய் எடுத்துக்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறாள். அது உடலுக்கு மிக நல்லது என்கிறாள். நெய் என்றாலே கொழுப்பு என்று கேள்விப்பட்ட எனக்கு இது... மேலும் பார்க்க

``உடற்பயிற்சி செய்தாலும், நீண்ட நேரம் உட்கார்ந்தால் இதய நோய் வரலாம்'' - ஆய்வில் தகவல்!

நீண்ட நேரம் அமர்ந்திருப்பவர்கள் உடற்பயிற்சி செய்தாலும் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என சமீபத்திய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.மருத்துவர் எஸிம் அஜுபோ (Ezim Ajufo) பாஸ்டனைச் சேர்ந்த இதவியல் நிபு... மேலும் பார்க்க

அஜித்பவார் - சரத்பவார் மோதிய தொகுதிகளில் 70% வாக்குப்பதிவு... சர்க்கரை சாம்ராஜ்யம் யாருக்கு?

எப்போதும் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு.. மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் இம்முறை எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான போட்டி நிலவியது. இத்தேர்தலில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா இரண்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: முதல்வர் பதவிக்கு இப்போதே போட்டி... தேர்தல் முடிவு வருவதற்குள் மோதும் கூட்டணிகள்..!

முதல்வர் பதவிக்கு இப்போதே கடும் போட்டி...மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை காலையில் எண்ணப்படுகிறது. இத்தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே இரண்டு அணியிலும் முதல்வர் பதவிக்கு இப்போத... மேலும் பார்க்க

``பணி ஓய்வுபெற்றும் பல ஆண்டாக தொழிற்சங்க பொறுப்பு..!'' - மதுரை தொ.மு.ச-வுக்குள் கசமுசா..!

"ரிடையர்ட் ஆகி பல வருசமானாலும் யூனியன் பொறுப்பை கெட்டியாக பிடித்துக்கொண்டு அடுத்தவருக்கு வழிவிடாமல் அட்டகாசம் செய்கிறார்கள்" என்றுகொந்தளிக்கிறார்கள் அரசு போக்குவரத்துக் கழக திமுக தொழிற்சங்கத்தினர்.தமி... மேலும் பார்க்க