Bihar Results: ``முழுக்க முழுக்க கட்சிக் கட்டமைப்பின் தோல்வி" - காங்கிரஸ் தலைவர்...
Anant Kumar Singh: சிறையிலிருந்தவாரே 91,000 வாக்குகள்; வெற்றிபெற்ற ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர்!
பீகார் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.
வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் சுமார் 140-க்கும் மேற்பட்ட இடங்களுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும் என்று தெரிவித்த நிலையில், தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை பெற்று கிட்டத்தட்ட தாங்கள் ஆட்சியமைப்பதை உறுதிசெய்திருக்கிறது.

இந்த நிலையில், ஐக்கிய ஜனதா தளத்தின் வேட்பாளர் ஆனந்த் குமார் சிங் சிறையிலிருந்தவாறே வெற்றி பெற்றிருக்கிறார்.
மொகாமா தொகுதியில் போட்டியிட்ட ஆனந்த் குமார் சிங், சுமார் 91,000 வாக்குகள் பெற்று, ராஷ்ட்ரிய ஜனதா தளம் வேட்பாளர் வீணா தேவியை சுமார் 28,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருக்கிறார்.

ஜன் சுராஜ் கட்சியின் ஆதரவாளர் துலார்சந்த் யாதவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக நவம்பர் 2-ம் தேதியன்று கைதுசெய்யப்பட்டு 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் ஆனந்த் குமார் சிங் வைக்கப்பட்டிருக்கிறார்.
இவர், 2005, 2010-ல் ஐக்கிய ஜனதா தளம் சார்பிலும், 2015-ல் சுயேச்சையாகவும், 2020-ல் ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பாகவும் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாக வெற்றிபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.













