அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம்: "ரத்து செய்க; மாநிலத்தின் அனுமதியின்றி..!"- மோடி...
AUSvIND: `கோலியை பெர்த்தில் சதம் அடிக்க விட்டிருக்கக்கூடாது!'- ஆஸியை விமர்சிக்கும் மைக்கேல் க்ளார்க்
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் க்ளார்க், பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியிலேயே கோலியை சதமடிக்க விட்டிருக்கக்கூடாது என விமர்சித்திருக்கிறார்.
மைக்கேல் க்ளார்க் பேசுகையில், 'கோலி ஆடியதை விட சிறப்பான இரண்டாம் இன்னிங்ஸ் ஆட்டத்தை பார்க்க முடியாது. அந்த இன்னிங்ஸில் கோலியின் மீது எந்த அழுத்தமும் இல்லை. முன்னதாக கோலி நிறைவாக ரன் சேர்த்திருக்கவில்லை. இரண்டாம் இன்னிங்ஸில் கோலி உள்ளே நுழைந்த போது இந்திய அணி ஆதிக்கமாக ஆடிக்கொண்டிருந்தது. இன்னிங்ஸின் முதல் பாதியில் விராட் கோலி கடுமையாக உழைத்து கவனமாக ரன் சேர்த்துக் கொண்டிருந்தார். தன்னம்பிக்கை கூடியவுடன் இயல்பான ஆட்டத்தை ஆட தொடங்கிவிட்டார். கோலி சதத்தை அடித்து முடிக்கையில் 'Kohli is back' என அனைவரையும் சொல்ல வைத்துவிட்டார்.
நான் முன்பே சொல்லியிருந்தேன், ஒரு அணியின் சிறந்த வீரரை ஒரு தொடரின் முதல் போட்டியிலேயே நன்றாக ஆட விட்டுவிடாதீர்கள். அவர்கள் கடினமாக உழைத்து போராடி மூன்றாவது நான்காவது போட்டியில் நன்றாக ஆடினால் சரி. அதை நாம் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், கோலியை ஆஸியினர் முதல் போட்டியிலேயே சதமடிக்க வைத்துவிட்டார்கள்.
இப்போது அவர் முழு நம்பிக்கையோடு இருப்பார். இனி அவரை சறுக்க வைக்க தனியாக யோசிக்க வேண்டும். அவர் தனது ரிதமை மீட்டெடுத்துவிட்டார். அவர் தன்னுடைய உச்சபட்ச ஃபார்முக்கு வந்திருக்கிறார். இனி அவரை கட்டுப்படுத்துவது கடினம்.' என மைக்கேல் க்ளார் பேசியிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...