செய்திகள் :

Baba Siddique Murder: 25 நாள்கள் உளவு; 8 மணி நேர காத்திருப்பு; போலீஸிடம் சிவகுமார் சிக்கியது எப்படி?

post image

மும்பையில் கடந்த மாதம் 12ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் படுகொலை செய்யப்பட்டார். மூன்று பேர் சேர்ந்து இப்படுகொலையைச் செய்தனர். அவர்களில் குர்னைல் சிங் மற்றும் தர்மராஜ் ஆகியோர் சம்பவ இடத்தில் பிடிபட்டனர். ஆனால் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படும் சிவகுமார் கூட்டத்தில் தப்பிச்சென்றுவிட்டார். அவர் உத்தரப்பிரதேசத்தில் உள்ள பஹ்ரைச் என்ற இடத்தில் நேற்று முன்தினம் (நவம்பர் 12) கைது செய்யப்பட்டார். அவருடன் அவருக்கு உதவிய கூட்டாளிகள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மும்பை கொண்டு வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சிவகுமாரிடம் நடத்திய விசாரணையில், "நடிகர் சல்மான் கானுக்கு அடிக்கடி கொலை மிரட்டல் விடுத்துக்கொண்டிருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் கண்ணில் யார் பட்டாலும் சுட்டுவிடும்படி தன்னிடம் தெரிவித்தார்" என்று கூறியுள்ளார். அதோடு கடவுளுக்காகவும், சமுதாயத்திற்காகவும் இக்காரியத்தைச் செய்வதாக சிவகுமாரிடம் அன்மோல் பேசி இருக்கிறார் என்று தெரிய வந்தது.

சிவகுமார் - பாபா சித்திக்

சிவகுமார் துப்பாக்கியால் சுட்டவுடன் தனது சட்டையை மாற்றிக்கொண்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பித்து ஆட்டோ ஒன்றில் அருகில் உள்ள குர்லா ரயில் நிலையம் சென்றுள்ளார். அங்கிருந்து புனே சென்று புனேயில் இருந்து சொந்த ஊரான உத்தரப்பிரதேசத்திற்குச் சென்றுள்ளார். அவர் பிடிபட்டது எப்படி என்பது குறித்து இவ்வழக்கு விசாரணையில் நேரடியாக ஈடுபட்டுள்ள காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "சிவகுமார் கொலை செய்துவிட்டு ரயிலில் சென்றபோது தனது தொலைப்பேசியைத் தூக்கிப்போட்டுவிட்டார். அதன் பிறகு புனே செல்லும் போதும், அங்கிருந்து உத்தரப்பிரதேசம் செல்லும்போது தன்னுடன் பயணம் செய்யும் சக பயணிகளிடம் தொலைப்பேசியை வாங்கி தனது கூட்டாளிகளுடன் பேசியிருக்கிறார்.

லக்னோவில் இறங்கி பஹ்ரைச் என்ற இடத்திற்குச் சென்றுள்ளார். அங்குச் சென்ற இரண்டு நாட்களில் அவர் அங்கிருப்பது எங்களுக்குத் தெரிய வந்தது. ஆனால் அவர் தொலைப்பேசி பயன்படுத்துவதைத் தவிர்த்து வந்தார். இதனால் அவரைக் கண்டுபிடிப்பதில் சிரமம் இருந்தது. அங்குள்ள நான்பரா என்ற இடத்திலிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வனப்பகுதியில் குடிசை ஒன்றில் சிவகுமார் தங்கி இருந்தார்.

அவனுக்குத் தேவையான உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களை அவரது நண்பர்கள் வாங்கிக்கொடுத்தனர். நாங்கள் (காவல்துறை) பஹ்ரைச் நகரில் தங்கி இருந்து சிவகுமார் நண்பர்கள், உறவினர்கள் 50 பேரைத் தொடர்ந்து கண்காணித்து வந்தோம். அதில் மிகவும் நெருக்கமான 10 பேரைத் தேர்வு செய்து அவர்களை மட்டும் பின்னர் கண்காணிக்க ஆரம்பித்தோம். அவர்களில் 4 பேர் சிவகுமாருடன் தொடர்பில் இருப்பதை உறுதி செய்தோம். லக்னோவில் வாங்கிய புதிய தொலைப்பேசி மூலம் சிவகுமார் தனது நண்பர்களுடன் இரவு நேரங்களில் தொடர்பு கொண்டு பேசி வந்தார். அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து வந்தோம். சிவகுமார் இருக்கும் இடத்தை உறுதியாகத் தெரிந்து கொண்டு மும்பையிலிருந்து, மேலும் சில காவல்துறை அதிகாரிகளை வரவழைத்தோம். அதோடு உத்தரப்பிரதேச காவல்துறையும் எங்களுடன் சேர்ந்து கொண்டனர்.

பாபா சித்திக்

சிவகுமார் நண்பர்கள் சிலர் அங்குள்ள துணிக்கடையில் பல்வேறு அளவுகளில் உடைகள் வாங்கினர். அந்த அளவு சிவகுமாருக்கு ஏற்றதாக இருந்தது. உடனே அவர்களைப் பின் தொடர்ந்து சென்று அவர்கள் தப்பிச்செல்ல முடியாத வகையில் மேம்பாலம் ஒன்றில் அவர்களை மடக்கிப் பிடித்து விசாரித்தோம்.

விசாரணையில் அவர்கள் சிவகுமார் எங்கு இருக்கிறார் என்ற உண்மையைத் தெரிவித்தனர். அவர்கள் சொன்ன இடத்திற்குச் சென்ற போது சிவகுமார் இல்லை. இரவு முழுக்க அங்குக் காத்திருந்தோம். 7 மணி நேரம் காத்திருந்த பிறகு சிவகுமார் அங்கு வந்தார். அவரை அதிரடியாகக் கைது செய்தோம். அவனைக் கைது செய்ய உத்தரப்பிரதேசத்தில் 25 நாட்கள் நாங்கள் தங்கி இருந்து இக்காரியத்தை வெற்றிகரமாக முடித்தோம். சிவகுமார் நேபாளத்திற்குத் தப்பிச்செல்லத் தேவையான உடைகளை அவரது நண்பர்கள் வாங்கி வந்திருந்தனர்" என்று தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

திருச்சி: காவிரி ஆற்றங்கரையில் இரண்டாவது முறையாக கிடைத்த ராக்கெட் லாஞ்சர்! - அதிர்ச்சியில் மக்கள்

திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் அருகே காவிரி ஆற்றின் கரையில் கடந்த மாதம் 30 - ஆம் தேதி ராக்கெட் லாஞ்சர் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதுகுறித்து போலீஸார் விசாரணை செய்ததில், அது கொரிய போரின் போது அமெரிக்க ... மேலும் பார்க்க

வேலூர்: முன்னாள் ராணுவ வீரர் மீதான போக்சோ வழக்கு; 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த நீதிமன்றம்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள ஒலக்காசி ரோடு பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சேகர் (61).முன்னாள் ராணுவ வீரரான சேகர், கடந்த 2022ஆம் ஆண்டு 16 வயதான பள்ளி மாணவியிடம் பாலியல் வன்கொடுமையில் ... மேலும் பார்க்க

பெண் காவலர் பாலியல் சீண்டல் வழக்கு: ஓய்வுபெற்ற ஐ.ஜி முருகனுக்கு பிடி வாரண்ட் - நீதிமன்றம் அதிரடி!

இன்று சைதாப்பேட்டை 11வது மெட்ரோ பாலிட்டன் நீதிமன்றத்தில் முன்னாள் ஐ.ஜி முருகனுக்கு எதிராக பெண் எஸ்.பி தொடர்ந்த பாலியல் சீண்டல் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு ஆஜராகாத முருகனுக்கு நீதிபதி ... மேலும் பார்க்க

சேலம்: பள்ளி வகுப்பறையில் மாணவரை கால் பிடித்து விடச் சொன்ன ஆசிரியர்; பரவிய வீடியோ, பாய்ந்த நடவடிக்கை

சேலம் மாவட்டம், தலைவாசல் தாலூகாவிற்கு உட்பட்ட கிழக்கு ராஜாபாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் கிழக்கு ராஜாபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகு... மேலும் பார்க்க

இறந்ததாக அறிவித்த 3 மருத்துவர்கள்; தகனம் செய்யும்போது உயிர்த்தெழுந்த இளைஞர் - என்ன நடந்தது?

ராஜஸ்தான் மாநிலம், ஜுன்ஜுனு மாவட்டத்தில் வசித்தவர் ரோஹிதாஷ் குமார் (25). வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளியான இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. உடனே அவரின் உறவினர்கள், அ... மேலும் பார்க்க

நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு; போலீஸ் விசாரணை!

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை சீதா. இவர் விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். இந்தநிலையில் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அவர் புகார் ஒன்ற... மேலும் பார்க்க