செய்திகள் :

Bahubali: ``ரூ.120 கோடி பட்ஜெட்; மற்றொரு கோணத்தில் உருவாகும் பாகுபலி" - இயக்குநர் ராஜமௌலி அறிவிப்பு!

post image

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில், நடிகர்கள் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா ஷெட்டி, ரம்யா கிருஷ்ணன், தமன்னா பாட்டியா, சத்யராஜ் மற்றும் நாசர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த படம் பாகுபலி.

இரண்டு பாகங்காளாக வெளியான இந்தப் படம் 'பாகுபலி: 'தி எபிக்' என திருத்தப்பட்ட ஒரே பாகமாக இன்று (31-ம் தேதி) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

பாகுபலி; தி எபிக் அறிவிப்பு வெளியானதிலிருந்து பாகுபலியின் மூன்றாவது பாகம் வெளியாகவிருக்கிறது என்ற வதந்தி பரவி வந்தது.

ராஜமௌலி, பிரபாஸ்
ராஜமௌலி, பிரபாஸ்

இந்த நிலையில், பிரபாஸ் மற்றும் ராணா டகுபதி ஆகியோருடன் இயக்குநர் ராஜமௌலி தனியார் செய்தி நிறுவனத்துக்கு ஒரு நேர்காணல் அளித்திருந்தார்.

அதில், ``‘பாகுபலி: தி எடர்னல் வார்’ என்ற அனிமேசன் படத்தின் டீசர் வெளியிட்டிருக்கிறோம். இது பாகுபலியின் 3-வது பாகமல்ல. இது பாகுபலி உலகின் தொடர்ச்சி.

இது ஒரு அனிமேஷன் படம். அமேசானில் 2D அனிமேஷனை வெளியிட்டோம். ஆனால், இது 3D அனிமேஷனாக படமாக வெளியாகும். திறமையான அனிமேஷன் இயக்குனர் இஷான் சுக்லா என்னைச் சந்தித்தார்.

அவர் பாகுபலி கதையை வேறொரு கோணத்தில் பார்க்கும் யோசனையை கொண்டு வந்தார். அந்த யோசனை எனக்கு பிடித்திருந்தது.

அதனால் அதே கதாபாத்திரங்கள், ஆனால் வேறு ஒரு கோணத்தில் பாகுபலி: தி எடர்னல் வார் உருவாகி வருகிறது. கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக இந்தத் திட்டத்தில் பணியாற்றி வருகிறோம்.

அனுஷ்கா - பாகுபலி 2
அனுஷ்கா - பாகுபலி 2

இந்தப் படத்தின் பட்ஜெட் சுமார் ரூ.120 கோடி" என்றார். அதைத் தொடர்ந்து பேசிய ராஜமௌலி, ``ரூ.120 கோடி என்பது பாகுபலி முதல் பாகத்தின் பட்ஜெட்.

'பாகுபலி பகுதி 1' படத்தின் ஆரம்ப பட்ஜெட்டைப் போலவே, அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்திய அனிமேஷன் படமாக இது இருக்கும். இந்தப் படம் உங்களுக்கு பிடித்திருந்தால் அது வெற்றிப்பெற்றுவிடும்." எனக் குறிப்பிட்டார்.

Rukmini Vasanth: 'மென் மயங்கிக் கிடந்தேனடி என் போதையே' - நடிகை ருக்மினி வசந்த் க்ளிக்ஸ் |Photo Album

Rukmini Vasanth: ``சிறு புன்னகை சிதறினாள்" - ருக்மிணி வசந்த் லேட்டஸ்ட் கிளிக்ஸ் | Photo Album மேலும் பார்க்க

தி கேர்ள் பிரண்ட்: ``பக்கபலமாக நின்ற அனைத்து ஆண்களுக்கும்" - நடிகை ராஷ்மிகாவின் எமோஷனல் கடிதம்!

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் இயக்குநர் ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ‘தி கேர்ள் பிரண்ட்’ என்றப் படத்தில் நடித்திருக்கிறார். இவருடன் நடிகர் தீக்சி... மேலும் பார்க்க

Allu Sirish: `வருவேன் உன் பின்னே' - அல்லு அர்ஜூன் தம்பி அல்லு சிரிஷுக்கு நிச்சயதார்த்தம்!

அல்லு அர்ஜூனின் சகோதரரான அல்லு சிரிஷுக்கு நேற்றைய தினம் நிச்சயதார்த்தம் நடைபெற்றிருக்கிறது. அல்லு அர்ஜூனைத் தொடர்ந்து அவருடைய குடும்பத்திலிருந்து அல்லு சிரிஷும் கடந்த 2013-ம் ஆண்டு திரைத்துறைக்குள் வந... மேலும் பார்க்க

Rashmika: ``சமூகம் நமக்கு அதைத்தான் ஊட்டியிருக்கிறது!" - ராஷ்மிகா

ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கும் `தி கேர்ள்ஃப்ரண்ட்' திரைப்படம் வருகிற நவம்பர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தாண்டில் மட்டும் `சிக்கந்தர்', `குபேரா', `தம்மா' என ராஷ்மிகா நடித்த மெகா பட்ஜெட்... மேலும் பார்க்க

Rishab Shetty: ``அன்புக்கும், சிரிப்புக்கும் நன்றி" - ரிஷப் ஷெட்டியின் தீபாவளி | Photo Album

Rishab shetty: ராஷ்மிகா அறிமுகம்; தேசிய விருது வென்ற கிட்ஸ் படம்! - ரிஷப் ஷெட்டி, சில சம்பவங்கள் மேலும் பார்க்க