Basics of Share Market 13: NSDL, CSDL - பங்குச்சந்தையில் இருக்கும் முக்கியமான அமைப்புகள்
கடந்த அத்தியாயத்தில் டிமேட் கணக்கு பற்றிப் பார்த்தோம்... அல்லவா... அந்த டிமேட் கணக்குகளை பாதுகாக்கவும், நிர்வாகிக்கவும், நீங்கள் வாங்கும் பங்குகள் உங்கள் டிமேட் கணக்கில் சேர்வதும், விற்கும் பங்கும் உங்கள் டிமேட் கணக்கில் இருந்து கழிவதையும் கண்காணிக்கும் இந்தியாவில் இருக்கும் இரு அமைப்புகள் தான் NSDL (National Securities Depository Limited), CSDL (Central Depository Services Limited).
ஒரு நிறுவனம் பங்கை வெளியிடுகிறது அல்லது பங்குச்சந்தையின் உள் வருகிறது என்றால் அதன் நம்பகத்தன்மையை ஆராய ஒரு அமைப்பு வேண்டுமல்லவா... அந்த அமைப்புகளுக்கு கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சி என்று பெயர். இந்தப் பணியை இந்தியாவில் CRISIL, ICRA, CARE அமைப்புகள் பார்த்துக் கொள்கின்றன.
ஹெச்.டி.எஃப்.சி, ரிலையன்ஸ் கேப்பிட்டல், எஸ்.பி.ஐ கேப்பிட்டல் போன்ற பல அசட் மேனேஜ்மென்ட் கம்பெனிகள் இந்தியாவில் தான் உள்ளது. இவர்கள் பொதுமக்களிடம் இருந்து பணம் பெற்று, சந்தையில் முதலீடு செய்வார்கள். பிறகு வரும் லாபத்தை முதலீட்டாளர்களான பொதுமக்களுக்கு திரும்பித் தந்துவிடுவார்கள்.
நாளை: ஒரு நிறுவனத்தை பற்றி எப்படி தெரிந்துகொள்ள வேண்டும்?