எடப்பாடி கே.பழனிசாமி தமிழகத்தில் 23 மருத்துவக் கல்லூரிகளை தொடங்கி வைத்தாா்: மு.த...
Basics of Share Market 17: நல்ல பங்குகளை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும்?
'ஒரு பங்கு வாங்கப் போகிறோம்... அது நல்ல பங்கா... இல்லையா?' என்பதை எப்படி கண்டுபிடிக்க வேண்டும் என்ற கேள்வி எழும். கடந்த மூன்று அத்தியாயங்களின் தொடர்ச்சியாக கூட இந்த அத்தியாயத்தை பார்க்கலாம். சரி...இப்போது விஷயத்திற்கு வருவொம்...
'நானே பங்குச்சந்தைக்குப் புதிது. எனக்கு எப்படி பங்குகளைப் பற்றித் தெரியும்' என்று இதை மலையாக நினைக்காதீர்கள். 'இந்தக் கடை பாத்தியா...எத்தனை பிரான்ச்சுகள்?', 'இந்த விஷயத்திற்கு எவ்ளோ செலவு பண்ணியிருக்காங்க பாரு', 'அத யாராலயும் அடிச்சுக்கவே முடியாது' என்பதுபோல ஒரு நிறுவனத்தை பற்றியோ, ஒரு நிறுவனத்தின் தலைவர் பற்றியோ யாரிடமாவது பேசியிருப்போம். அது தான் உங்களுக்கான பங்கு. அந்த நிறுவனத்தின் பங்குகளைத் தேடி பாருங்கள். இல்லை... நீங்கள் இருக்கும் துறையிலேயே உங்களுக்கு தெரிந்த பிரபல, பெரிய நிறுவனத்தின் பங்கைத் தேடிப்பாருங்கள்.
சில நேரங்களில், பங்குச்சந்தை நன்கு தெரிந்த நண்பர், நாணய விகடன் மாதிரியான ஆதாரப்பூர்வமான சோர்ஸ்கள் மூலமும் உங்களுக்கான பங்கைக் கேட்டு அல்லது பார்த்து தெரிந்துகொள்ளலாம். ஆனால், 'இது மட்டும் போதுமா?' என்றால் நிச்சயம் போதாது. 'எந்தப் பங்கு வாங்கலாம்' என்ற சாய்ஸ் தேடுவதற்கு இதைப் பயன்படுத்தலாம்.
அதன் பின்னர், அதாவது பங்கை அடையாளம் கண்ட உடன், அந்த நிறுவனம் எப்படி செயல்படுகிறது, அது நல்ல நிறுவனமா, எதிர்காலத்தில் அந்த நிறுவனம் எப்படி இருக்கும், அது சந்தையின் தேவையையொட்டி செயல்படுகிறதா என்பதைப் பாருங்கள். இதைக் கடந்த அத்தியாயத்தில் பார்த்த வருடாந்திர அறிக்கை மூலம் தெரிந்துகொள்ளலாம்.
அடுத்ததாக, நிறுவனத்தின் சந்தை மதிப்பு, வருமானம், லாபம், நஷ்டம் ஆகியவற்றை ஆராய்ந்து பாருங்கள். இந்த எல்லா பாக்ஸ்களும் 'டிக்' ஆகியிருந்தால் மட்டுமே பங்கை வாங்குங்கள்.
நீங்கள் வைத்திருக்கும் அத்தனை காசு அல்லது முதலீடு செய்யப்போகும் அத்தனை காசையும் நீங்கள் அடையாளம் கண்ட ஒரே பங்கில் போட்டுவிட வேண்டும் என்பதில்லை. நிறுவனத்தின் மதிப்பைப் பொறுத்து முதலீடு செய்யுங்கள்.
நாளை: 'Lumpsum', 'SIP' என்றால் என்ன?!