செய்திகள் :

Basics of Share Market 19: போர்ட்ஃபோலியோ என்றால் என்ன... அதை எப்படி கட்டமைக்க வேண்டும்?!

post image

போர்ட்ஃபோலியோ - இந்த வார்த்தையை நாம் முன்னரே பார்த்திருக்கோம். நியாபகம் இருக்கிறதா? ஆம்...11-வது அத்தியாயத்தில் "நீங்கள் பங்குச்சந்தையில் என்னென்ன பங்குகள், பத்திரங்கள்...ஆகியவற்றில் முதலீடு செய்திருக்கிறீர்கள் என்ற லிஸ்டே போர்ட்ஃபோலியோ. இன்னும் எளிதாக புரிய சொல்ல வேண்டுமானால், பங்குச்சந்தை முதலீட்டின் பயோ டேட்டா, போர்ட்ஃபோலியோ" என்று பார்த்திருக்கிறோம்.

அதை தற்போது சற்று விரிவாக பார்க்கப்போகிறோம். இதை நாம் தெரிந்துகொண்டாலே நமது முதலீடுகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

முதலீடு

'முதலீடு செய்கிறோம்' என்று முடிவானதும், இஷ்டத்திற்கு பல நிறுவனங்களில் இருந்து பல பங்குகளை வாங்கி குவிக்காமல், முன்னர் சொன்ன ஆய்வுகளையும், இனி வரும் அத்தியாயங்களில் சொல்லப்போகும் ஆய்வுகளையும் செய்து உங்கள் லட்சியங்களுக்கு ஏற்ற மாதிரியான பங்குகளை வாங்குங்கள். ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்கு போகிறீர்கள் என்று வைத்துகொள்வோம். அரிசி தேவைப்படுகிறது என கடையில் இருக்கும் அத்தனை அரிசியையும் வாங்கமாட்டீர்கள் அல்லவா... அரிசி உங்களுக்கு தேவையான அளவு, பருப்பு உங்களுக்கு தேவையான அளவு, மஞ்சள் பொடி, மிளகாய் தூள் - இப்படி உங்களுக்கு தேவையானவற்றை தேவையான அளவு எடுத்து பாஸ்கேட் (Basket)-ல் போடுவீர்கள்.

அந்த பாஸ்கேட் தான் போர்ட்ஃபோலியோ. நீங்கள் பார்த்து பார்த்து வாங்கியிருக்கும் அரிசி, பருப்பு, மஞ்சள், மிளகாய் தூள் (அதாவது நிறுவனப் பங்குகள், கடன் பங்குகள், தங்கம், நிலம்) தான் பங்குகள். இந்த பாஸ்கேட்டில் இருக்கும் பொருட்களை வைத்து தான் நீங்கள் சமைக்கும் சமையல் ஆரோக்கியமாக இருக்கப்போகிறதா...இல்லையா என்பது முடிவாகப்போகிறது.

பிராக்கெட்டை பார்த்த உடன், என்னடா இது தங்கம், நிலம் எல்லாம் இருக்கிறது என்று நினைக்காதீர்கள். நீங்கள் எந்தவிதங்களில் காசை பெருக்க நினைத்திருக்கிறீர்களோ...பொருளையோ, சொத்தையோ சேர்த்திருக்கிறீர்களோ...அவை எல்லாமே போர்ட்ஃபோலியோவில் அடங்கும்.

போர்ட்ஃபோலியோ கட்டமைப்பு

போர்ட்ஃபோலியோ கட்டமைப்பு என்று வந்துவிட்டால், எத்தனை சதவிகிதத்தை எதில் முதலீடு செய்திருக்கிறீர்கள் என்பதை பார்க்க வேண்டும். 100 சதவிகித முதலீட்டையும் ஒரே விஷயத்தில் அதாவது தங்கம்/நிலம்/பங்கு என ஒன்றிலேயே செய்துவிடக் கூடாது. அந்த ஒன்று கவிழ்ந்தது என்றால் மொத்தமும் கவிழ்ந்தது தான். அதனால் ரிஸ்கை பொறுத்து உங்கள் முதலீடுகளை குறிப்பிட்ட சதவிகிதங்களாகப் பிரித்து முதலீடு செய்யுங்கள்.

அது எப்படி என்பதை நாளை பார்ப்போம்.

நாளை: முதலீடு செய்ய தெரிந்து கொள்ள வேண்டிய ஃபார்முலாக்கள்!

Basics of Share Market 36: 'பங்குச்சந்தையில் பின்பற்ற வேண்டிய 10 கோல்டன் ரூல்ஸ்!'

'பங்குச்சந்தை பற்றி நன்றாக தெரிந்துகொண்டேன்...இனி நானே நேரடியாக முதலீடு செய்யப்போகிறேன்' என்று முடிவுக்கு வந்துவிட்டீர்களா? அப்போது, உங்கள் முதலீட்டில் நீங்கள் பின்பற்ற வேண்டிய பத்து முக்கிய கோல்டன் ர... மேலும் பார்க்க

Basics of Share Market 35 : 'பங்குகளா... ஃபண்டுகளா?' - நீங்கள் முதலீடு செய்ய ஏற்றது எது?!

சந்தையில் நீங்களே முதலீடு செய்ய கீழே உள்ள செக்லிஸ்ட் உங்களுக்கு டிக் ஆகிறதா என்பதை ஒரு முறை சரிபார்த்து கொள்ளுங்கள்.சந்தை எப்படி இருக்கிறது, எதில் முதலீடு செய்யலாம், சந்தையின் முக்கிய போக்கு என்ன போன்... மேலும் பார்க்க

Share Market: 'தொடர்ந்து இறங்குமுகம்' - முதலீடு செய்யலாமா, காத்திருக்கலாமா? - நிபுணர் சொல்வதென்ன?

செப்டம்பர் இறுதி முதல் பங்குச்சந்தை ஒரு சில தினங்களைத் தவிர இறங்குமுகமாகவே இருந்தது...இருக்கிறது. இதனால், 'இப்போது முதலீடு செய்யலாமா...இல்லை, காத்திருக்கலாமா?' என்ற கேள்வி முதலீட்டாளர்கள் மத்தியில் கே... மேலும் பார்க்க

Basics of Share Market 34: பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கங்களை சமாளிப்பது எப்படி?

பங்குச்சந்தை ஏற்ற, இறக்கங்கள் வரும்போது நமக்குக் கலவையான மனநிலை இருக்கும். பங்கு விலை உயர்ந்தால், 'இன்னும் அதிகம் முதலீடு செய்து லாபம் பார்க்கலாம்' என்றும், பங்கு விலை குறைந்தால், 'இன்னும் கீழே இறங்கி... மேலும் பார்க்க