செய்திகள் :

Basics of Share Market 24: 'ஃபண்டுகள், அதன் வகைகள் பற்றி தெரிந்துகொள்வோம்... வாங்க!'

post image

மியூச்சுவல் ஃபண்டுக்கு வந்துவிட்டால், ஃபண்ட் என்ற வார்த்தை இல்லாமல் இருக்காது. ஃபண்ட் என்றால் என்ன என்பதை எளிதாக கூறவேண்டுமானால், அதுவும் ஒரு வகையான பங்கு என்று எடுத்துகொள்ளலாம். இந்த ஃபண்டுகளின் வகைகளை பார்க்கலாம். வாங்க...

இக்விட்டி ஃபண்ட் - நிறுவனத்தின் பங்குகள் இக்விட்டி ஃபண்ட் என்று கூறுப்படுகிறது. இதில் அதிக லாபம் பெறலாம். அதற்கேற்ப ரிஸ்க்கும் மிக அதிகம்.

மியூச்சுவல் ஃபண்டுகளும், அதன் வகைகளும்...

கடன் ஃபண்ட் - அரசு பாண்டுகள், கார்ப்பரேட் பாண்டுகள் போன்றவற்றில் முதலீடு செய்வது கடன் ஃபண்ட். இதில் லாபமும், ரிஸ்க்கும் குறைவு. குறுகிய கால முதலீட்டிற்கு ஏற்றது இது. பாண்ட் பற்றி எளிதாக கூறவேண்டுமானால், அரசு ஒரு சாலை அமைக்கிறது என்று வைத்துகொள்வோம். அதற்கு பணம் வேண்டுமல்லவா, அதற்காக அரசு பாண்டுகள் வெளியிடும். அந்தப் பாண்டை வாங்க நாம் கொடுக்கும் பணத்தை சாலை அமைக்க பயன்படுத்தி கொள்ளும். நம் தொகைக்கான வட்டியை நமக்கு அரசு வழங்கிவிடும். கிட்டதட்ட இதே மாதிரி தான் அனைத்து கடன் ஃபண்டுகளும் இயங்கும்.

ஹைப்ரிட் ஃபண்ட் - மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிப்யூட்டர்கள் சந்தைப் போக்கைப் பொறுத்து நாம் கொடுக்கும் தொகையை இக்விட்டி ஃபண்ட், கடன் ஃபண்ட், கோல்டு ஃபண்ட் என பிரித்து முதலீடு செய்வதாகும். இப்படி முதலீடு செய்யும்போது நமது முழுத் தொகையும் ஒரே இடத்தில் மாட்டிக்கொள்ளாது. அதனால் ரிஸ்க் குறைவு.

இன்னும் இதிலேயே வகைகள், கிளை வகைகள் என ஏகப்பட்ட வகைகள் உள்ளன. ஆனால், முக்கியமாக இந்தப் பங்குகளை பற்றி தெரிந்துகொண்டால் போதுமானது.

திங்கட்கிழமை: CAGR கணக்கிடுவது எப்படி தெரியுமா?!

Basics of Share Market 36: 'பங்குச்சந்தையில் பின்பற்ற வேண்டிய 10 கோல்டன் ரூல்ஸ்!'

'பங்குச்சந்தை பற்றி நன்றாக தெரிந்துகொண்டேன்...இனி நானே நேரடியாக முதலீடு செய்யப்போகிறேன்' என்று முடிவுக்கு வந்துவிட்டீர்களா? அப்போது, உங்கள் முதலீட்டில் நீங்கள் பின்பற்ற வேண்டிய பத்து முக்கிய கோல்டன் ர... மேலும் பார்க்க

Basics of Share Market 35 : 'பங்குகளா... ஃபண்டுகளா?' - நீங்கள் முதலீடு செய்ய ஏற்றது எது?!

சந்தையில் நீங்களே முதலீடு செய்ய கீழே உள்ள செக்லிஸ்ட் உங்களுக்கு டிக் ஆகிறதா என்பதை ஒரு முறை சரிபார்த்து கொள்ளுங்கள்.சந்தை எப்படி இருக்கிறது, எதில் முதலீடு செய்யலாம், சந்தையின் முக்கிய போக்கு என்ன போன்... மேலும் பார்க்க

Share Market: 'தொடர்ந்து இறங்குமுகம்' - முதலீடு செய்யலாமா, காத்திருக்கலாமா? - நிபுணர் சொல்வதென்ன?

செப்டம்பர் இறுதி முதல் பங்குச்சந்தை ஒரு சில தினங்களைத் தவிர இறங்குமுகமாகவே இருந்தது...இருக்கிறது. இதனால், 'இப்போது முதலீடு செய்யலாமா...இல்லை, காத்திருக்கலாமா?' என்ற கேள்வி முதலீட்டாளர்கள் மத்தியில் கே... மேலும் பார்க்க

Basics of Share Market 34: பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கங்களை சமாளிப்பது எப்படி?

பங்குச்சந்தை ஏற்ற, இறக்கங்கள் வரும்போது நமக்குக் கலவையான மனநிலை இருக்கும். பங்கு விலை உயர்ந்தால், 'இன்னும் அதிகம் முதலீடு செய்து லாபம் பார்க்கலாம்' என்றும், பங்கு விலை குறைந்தால், 'இன்னும் கீழே இறங்கி... மேலும் பார்க்க