செய்திகள் :

Basics of Share Market 41: 'வெறும் 60 ரூபாய்க்கு தங்கம் வாங்கலாம்!' - எங்கு... எப்படி?!

post image

'தங்கம் விக்கற விலைக்கு, வாங்கவா முடியுது?' என்று நினைப்பவர்கள்கூட, மியூச்சுவல் ஃபண்டில் தங்கத்தில் முதலீடு செய்யலாம். 'அட' என்று தோன்றுகிறதா... அது எப்படி என்று பார்க்கலாம் என்றும், எது நல்லது என்றும் பார்க்கலாம் வாங்க...

Gold Exchange Traded Fund-ன் சுருக்கமே கோல்டு இ.டி.எஃப். இது பங்குச்சந்தையில் பங்குகள் போல விற்பனையாகும் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகள் ஆகும். இப்போது விற்கும் தங்கம் விலைக்கு தங்கம் வாங்குவது நடுத்தர மக்களுக்கு குதிரைக்கொம்பாக இருக்கிறது.

கோல்டு இ.டி.எஃப்... கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட்...

ஆனால், அதை எளிதுப்படுத்தி, ஒரு கிராம் தங்கத்தை 100 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் ஒரு யூனிட்டாக கருதப்படுகிறது. அதில் ஒரு யூனிட்டின் விலை ரூ.60 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனால், ரூ.60-க்கூட கோல்டு இ.டி.எஃப்பில் தங்கம் வாங்க முடியும். ஆனால் என்ன, இதில் முதலீடு செய்ய டிமேட் கணக்கு மட்டும் தேவை. அதனால், அதை மட்டும் ஆரம்பித்துக்கொள்ளுங்கள்.

கோல்டு சேவிங்க்ஸ் ஃபண்டில் ஒரு டிமேட் கணக்கு இல்லாமல் கூட முதலீடு செய்யலாம். மேலும் எஸ்.ஐ.பி முறையை பயன்படுத்தலாம்.

தங்கத்தை வெறும் முதலீடாக மட்டும் பார்ப்பவர்களுக்கும், குறைவாக முதலீடு செய்பவர்களுக்கும் கோல்டு சேவிங்க்ஸ் ஃபண்ட் நல்ல ஆப்ஷன். தங்கத்தில் லட்சக்கணக்கில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் கோல்டு இ.டி.எஃப்பில் முதலீடு செய்யலாம்.

இரண்டையும் ஒப்பிடும்போது, கோல்டு இ.டி.எஃப்பில் செலவு விகிதம் குறைவு மற்றும் இதில் அதைவிட சற்று அதிக வருமானம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/TATAStoryepi01

Adani பங்குகள் மீண்டும் உயர்வு - சந்தை உணர்த்துவது என்ன? | IPS Finance | EPI - 75

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃபைனான்ஸின் இந்த எபிசோடில்,அதானி குழுமப் பங்குகளின் சமீபத்திய உயர்வு, தற்போதைய சந்தை சூழ்நிலை மற்றும் முதலீட்டாளர்களுக்கு அது என்ன சமிக்ஞைகளை அளிக்கிறது என்பது குறித்து விளக்கப... மேலும் பார்க்க

Basics of Share Market 40: 'இன்டெக்ஸ் ஃபண்ட்... இ.டி.எஃப்' - யார் எதில் முதலீடு செய்யலாம்?

தொடர்ந்து மியூச்சுவல் ஃபண்டில் எந்த முதலீடு நல்லது என்பதைப் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில், இன்று 'இன்டெக்ஸ் ஃபண்டில் முதலீடு செய்யலாமால்... இ.டி.எஃப் அதாவது எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டில் முதலீடு ச... மேலும் பார்க்க

இந்திய மக்களிடம் அதிக தங்கம் இருப்பது சாதகமா…? பாதகமா...? | IPS Finance | EPI - 74

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...https://bit.ly/TATAStoryepi01 மேலும் பார்க்க

Basics of Share Market 38: ``ஆக்டிவ் ஃபண்டா... பேசிவ் ஃபண்டா" - எது முதலீட்டிற்கு ஏற்றது?!

நமது மியூச்சுவல் ஃபண்ட் மேனேஜர் அவரின் திறமையால் சந்தையைக் கணித்து முதலீடு செய்வது ஆக்டிவ் ஃபண்ட். சென்செக்ஸ், நிஃப்டி போன்ற குறியீடுகளை மட்டும் பின்பற்றி முதலீடு செய்வது பேசிவ் ஃபண்ட்.இந்தியாவில் ஆக்... மேலும் பார்க்க

இந்தியாவில் தயாராகும் Nokia... பங்கு விலை அதிகரிக்குமா? | IPS FINANCE | EPI - 73

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...https://bit.ly/ParthibanKanav... மேலும் பார்க்க

Basics of Share Market 38: `இதுவா... அதுவா' - மியூச்சுவல் ஃபண்டில் எந்த ஆப்ஷன் நல்லது?

நேற்றைய அத்தியாயத்தில் 'செக்டார் ஃபண்டா, டைவர்சிஃபைடு ஃபண்டா' எது நல்லது என்று பார்த்தோம். அதில் டைவர்சிஃபைடு ஃபண்ட்டில் ரிஸ்க் குறைவு என்று பார்த்திருந்தோம்.புதிய முதலீட்டாளர்களாக இருந்தாலும், சற்று ... மேலும் பார்க்க