ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது
BB Tamil 8 Day 53: `பவித்ராவைப் பார்த்து பொறாமைப்பட்ட தர்ஷிகா' - ரியல்ல அதுக்கு நேர் எதிராக நடக்குது
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 விஜய் டிவியில் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கியது. ஐம்பது நாட்களைக் கடந்து விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிற தொடரில் தொடர்ந்து வைல்டு கார்டு என்ட்ரி மூலம் ராயன், மஞ்சரி உள்ளிட்ட ஆறு பேர் சென்றனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் நடிகை தர்ஷிகாவுக்கும் வி.ஜே, விஷாலுக்குமிடையே ஒரு லவ் ஸ்டோரிதான் பேசு பொருளாக இருக்கிறது. பொதுவாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் யாராவது இரண்டு பேருக்கிடையில் இதுபோல காதல் குறித்த பேச்சு எழுவதுண்டு. அதற்கு பிக் பாஸ் வீட்டிலேயே பலர் மறுப்பும் சொல்வதுண்டு. இந்த விவகாரத்தில் பவித்ரா தர்ஷிகாமீது மிகவும் வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருக்கிறார். பிக் பாஸ் வீட்டுக்குள் இப்படியிருக்கிற சூழலில் தர்ஷிகாவுடன் நடித்தவர்கள் சிலரிடம் பேசினோம்.
‘’பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளிநாட்டு ஆடியன்ஸிடம் கவனம் பெறுவதற்காக சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்தவங்களுக்கு வாய்ப்பு தருவாங்க. முந்தைய ஒரு சீசன்ல ஜனனி வந்தது நினைவிருக்கலாம். ஜனனி வரிசையில தர்ஷிகாவும் இலங்கை தமிழ்ப் பொண்ணு. படிச்சு முடிச்சுட்டு மாடலிங், நடிப்புக்காக தமிழ்நாட்டுக்கு வந்தாங்க.
இங்க வந்ததும் மிஸ்டர் கோல்டு, மலபார் கோல்டு முதலான சில விளம்பரங்கள்ல நடிச்சாங்க. மலபார் கோல்டுல நடிகர் கார்த்தியுடன் வந்தாங்க. தொடர்ந்து சன் டிவியில் சில சீரியல் வாய்ப்புகள் அமைஞ்சது.
அது மூலமா டிவிக்குள் வந்த சில நாட்கள்லயே விஜய் டிவி இவரைக் கூப்பிட்டுடுச்சு. ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ தொடர்ல இவங்கதான் செகண்ட் ஹீரோயின். இந்தத் தொடர் ஹீரோயினா இருந்தவங்கதான் பவித்ரா ஜனனி. அந்த வகையில் பிக் பாஸ் வர்றதுக்கு முன்னாடியே பவித்ராவும் தர்ஷியும் நல்ல நண்பர்கள்’’ என்கிறார்கள் தர்ஷிகாவின் உடன் நடித்த சிலர்.
ஹீரோயினுக்கு ஹீரோ வலுக்கட்டாயமாகத் தாலி கட்டுவது போன்ற இந்தத் தொடரின் புரோமோ சீரியல் தொடங்குவதற்கு முன்பே பரபரப்பைக் கிளப்பியது நினைவிருக்கலாம்.
இந்தத் தொடரின் கதையிலும் இவர் ஹீரோவைத் திருமணம் செய்ய நினைப்பார். அந்த ஹீரோவோ பவித்ராவைக் கல்யாணம் செய்வதுதான் கதை. ’அப்போ பவித்ராவைப் பார்த்துப் பொறாமைப் படுவாங்க. இப்போ பிக்பாஸ் நிகழ்ச்சியில் பவித்ரா இவங்களுக்கும் விஷாலுக்குமான பழக்கத்தைப் பார்த்து இவங்க ஆதங்கப்படுறாங்க’ என்கிறார்கள் இவரைத் தொடகத்திலிருந்து அறிந்த மேலும் சிலர்.
’தென்றல் வந்து என்னைத் தொடும்’ சீரியலின் உதவி இயக்குநர் குருவிடம் பேசினோம்.
‘’ஒர்க்ல ரொம்ப கரெக்டான பொண்ணுங்க. ஷூட்டிங் ஷெட்யூலை அவ்வளவு பக்காவா மெயின்டெயின் பண்ணுவாங்க. ஷூட்டிங்ல அவங்களால எந்தவொரு பிரச்னையும் எப்பவுமே வந்ததில்லை. கடினமான உழைப்பாளினும் சொல்லலாம். அந்த அர்ப்பணிப்புக்காகவே விஜய் டிவி விருதெல்லாம் கூட இவருக்கு வந்த கொஞ்ச நாள்லயே கிடைச்சிருக்கு’’ என்றார் அவர்.
விளம்பரப் படங்கள், சீரியல் என பரபரப்பாக இயங்கி வந்தாலும் எதற்கும் கைவசம் இருக்கட்டுமெனெ நினைத்தாரா தெரியவில்லை, சைடில் பிசினஸ் ஒன்றையும் செய்து வருகிறார் இவர். `யாக்கை' என்கிற பெயரில் குழந்தைகள் பெண்களுக்கான ஆடைகள் ஷாப் ஒன்றையும் இவர் நடத்தி வருகிறார்.