பாகுபலி ராக்கெட்: `இந்தியாவுக்கு மற்றொரு பெருமை' - விண்ணில் வென்ற செயற்கைகோள் கு...
BB Tamil 9: ``இதுதான் ரியலா'' - பார்வதியின் பேப்பரை கிழித்த வைல்ட் கார்ட் சாண்ட்ரா
BB Tamil 9: பிக்பாஸ் சீசன் 9 பரபரப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த வாரம் புதிய 4 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் வீட்டுக்குள் அனுப்பப்படுகின்றனர். இத்தனை நாட்கள் வெளியில் இருந்து போட்டியாளர்களை உள்வாங்கியவர்கள் உள்ளே சென்றதும் ஆக்ரோஷமான ஆட்டத்தை விளையாடத் தொடங்கிவிட்டனர்.
புரோமோவில், போட்டியாளர்கள் இந்த சீசனில் பங்கேற்றதற்கான காரணத்தை ஒரு தாளில் எழுதச் சொல்லப்படுகின்றனர். வைல்ட்கார்ட் தம்பதியர்களான பிரஜின் மற்றும் சாண்ட்ரா, போட்டியாளர்கள் எழுதியதை படித்துக்காட்டச் சொல்லி, எல்லோரின் முன்னிலையிலும் கேள்வி எழுப்புகின்றனர்.
"நான் யார் என்பதைத் தெரிந்துகொள்வதற்கும், and to be real" என பாரு சொல்ல, "நீங்க இங்க இருப்பதுதான் ரியலா" எனக் கேள்வி எழுப்பி அவரது தாளை கிழித்தெறிகிறார் சாண்ட்ரா.
இதேப்போல கம்ருதீன் மற்றும் அரோராவின் பேப்பர்களும் கிழிக்கப்படுகிறது. இது மிகவும் ரூடாக இருப்பதாக கடிந்துகொள்கிறார் அரோரா. வைல்ட் கார்ட் போட்டியாளர்களின் இந்த 'rude' யுத்தி வெற்றியடைகிறதா, இன்னும் யாருடைய பேப்பர்கள் எல்லாம் கிழித்தெறியப்பட்டுள்ளன என்பதை எபிசோடில் காணலாம்.
கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர். இதில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் வெளியேற, 17 பேர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக இருந்தனர். தற்போது வைல்ட் கார்ட் போட்டியாளர்களால் ஆட்டம் எவ்வளவு சூடு பிடிக்கிறது எனப் பார்க்கலாம்!















