Bihar: 27 வாக்குகள் வித்தியாசத்தில் முதல்முறையாக எம்.எல்.ஏ ஆன JDU வேட்பாளர்; ஆட்...
BB Tamil 9: "உனக்கு எந்த அருகதையும் இல்லை" - விஜே பார்வதி - கனி சண்டை; இரைச்சலாகும் பிக் பாஸ் வீடு!
இன்றைய 40வது நாள் பிக்பாஸ் எபிசோடின் 3வது புரோமோ வெளியாகியிருக்கிறது. விஜே பார்வதி கூச்சல் சத்தம்தான் பிக்பாஸ் வீடு முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
கம்ருதீனுடன் சண்டை, சபரியிடம் சண்டை, விக்ரமிடம் சண்டை என வரிசையாக வம்பிழுத்து, இப்போது கனியிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார் விஜே பார்வதி.
"துஷாரும் அரோராவும் விட்டுக் கொடுக்காமல் ஒன்றாக இருந்தார்கள். அதன்பிறகு கம்ருதீனை கைக்குள் போட்டுவைத்திருகிறார் அரோரா" என திவாகரிடம் புறணி பேசி அடுத்தடுத்த சர்ச்சைகளை கிளப்பி வருகிறார் பாரு.

சரி, அதோடு முடிந்தது என்று பார்த்தால் இன்றைய எபிசோடில் கனியிடமும் வம்பிழுத்து வைத்திருக்கிறார். தான் பேசுவதுதான் சரி, தன்னை யாரும் மிஞ்சி விடக்கூடாது என்பதை தலையில் ஏற்றிக் கொண்டு, எதிரே யார் வந்தாலும் தனது லவுடு ஸ்பீக்காரை ஆன் செய்து விடுகிறார் விஜே பார்வதி.
சமையல் வேலை செய்ய சீக்கிரம் வாருங்கள் எனக் கனி கூப்பிட்டதற்காக, "நான் 5 நிமிஷம் பேசுதுதாலதான் சமையல் வேலை நின்னுடுச்சா"னு குதர்க்கமாக விஜே பார்வதி, கனியிடம் கத்தி, "நீங்க உங்க சிறைக்குப் போங்க"னு கூச்சலிடுகிறார். காண்டான கனி, "இது என் வீடு என்னை வெளியே போகச் சொல்ல உனக்கு அருகதை இல்லை" என்று பதிலுக்குப் போட்டிப் போட்டு கனி கத்த, பிக் பாஸ் வீடே இரைச்சலாகி, எரிச்சலானது.
பிக் பாஸில் சண்டைகளும் சர்ச்சைகளும் பார்வையாளர்களுக்குச் சுவாரஸ்யத்தைக் கூட்டும்தான். ஆனால் தேவையில்லாத சண்டைகளால் கத்திக் கொண்டு பார்வதி ஏற்படுத்தும் இரைச்சல் எபிசோடையே இரைச்சலாக்குகிறது.



















