SIR: ``இதைத் தவிர வேறு வழியில்லை'' - அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் தீர்மானம் என்...
BB Tamil 9: "உள்ளே சிலருக்கு கிளாஸ் எடுக்கணும்" - ரக்கட் என்ட்ரி கொடுத்த வைல்ட் கார்ட் போட்டியாளர்
BB Tamil 9: கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர். இதில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் வெளியேற, 17 பேர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக இருந்தனர்.

இன்று 4 புதிய போட்டியாளர்கள் வைல்ட் கார்டில் உள்ளே செல்கின்றனர். அமித் பார்கவ், திவ்யா கணேஷ், பிரஜன், சாண்ட்ரா ஆகியோர் வைல்ட் கார்டில் இடம்பெற்றுள்ளனர். இவர்களை விஜய் சேதுபதி வரவேற்று வீட்டுக்குள் அனுப்புகிறார்.
சாண்ட்ரா ப்ரோமோவில் உள்ளே இருக்கிற குழுக்களை உடைப்பதுதான் தனது உத்தி என்றவாறு பேசியிருக்கிறார்.
திவ்யா, `உள்ளே சிலருக்கு கிளாஸ் எடுக்கணும்' எனப் பேசியிருக்கிறார். அமித், `தான் வாய்சவடால் விட விரும்பவில்லை' என்றும் உள்ளே சென்று செஞ்சு காட்டுவதாகவும் பேசியிருக்கிறார்.
நேற்று விஜய் சேதுபதியிடம் வாங்கிக்கட்டிய போட்டியாளர்கள் இன்று வைல்டு கார்ட் போட்டியாளர்களிடம் வாங்கிக் கட்டிக்கொள்கின்றனர். ரக்கடாக பேசிவிட்டு உள்ளே செல்பவர்களின் ஆட்டம் எப்படி இருக்கப்போகிறது என்பதை எபிசோடில் பார்க்கலாம்.














