செய்திகள் :

Bigg Boss 9 Day 64: “ஏன் இப்படி ஹர்ட் பண்றீங்க; எனக்கு வலிக்கும்ன்னு..." - அரோராவை அழவைத்த கம்மு

post image

தல போட்டிக்கான பந்து விளையாட்டு காமெடியாக நல்லபடியாக நடந்து முடிந்தது. இதுவரை நடந்ததிலேயே இதுதான் சுவாரசியமான டாஸ்க். நல்லபடியாகவும் முடிந்தது. பாரு அந்தப் போட்டியில் இல்லாததுதான் இதற்குக் காரணமோ?

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 63

சான்ட்ராவின் பிரஜ்ஜினை, அதாவது பிரச்சினை என்னவென்றே தெரியில்லை. யார் மீது அவருக்கு கோபம்? துணிகளை அடுக்குவதற்காக உதவிக்கு வந்த திவ்யாவிடம் புகையும் பட்டாசுபோல காத்திருந்தார். பிறகு வெடித்ததுப் பாருங்கள் அந்த தவுசண்ட் வாலா… திவ்யாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. “நான் என்ன பண்ணேன்.. ஹெல்ப் பண்ணத்தானே வந்தேன்..?” என்று தூரத்தில் நின்று பரிதாபமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.

அரோரா
அரோரா

‘நான் என்ன பண்ணணும். இங்கு இருந்து வெளியே போகணுமா?’ என்று சான்ட்ரா ஆவேசத்தில் கத்த மற்றவர்களும் திகைத்துப்போனார்கள். “சரி விடுங்க. இப்ப அவங்க.. “ என்று மற்றவர்களை ஒதுங்கிப்போகச் சொன்ன சபரியிடம் “இப்ப என்ன.. இப்ப என்ன.. உங்களுக்கெல்லாம் மனச்சாட்சியே இல்லையா?” என்று சம்பந்தமில்லாமல் சான்ட்ரா கத்த ‘இது என்னடா வம்பா இருக்கு’ என்று தெறித்து ஓடினார் சபரி.

பிறகு பாருவுடன் நடந்த உரையாடலில் சான்ட்ராவின் கோபத்திற்கான காரணம் ஒரு மாதிரி குன்சாக கிடைத்தது. “பிரஜின் என்கிட்ட பேசாம திவ்யா கிட்டதான் அதிகம் பேசிட்டு இருந்தான்.. அவ சாப்பிட்டாளா..இல்லையான்னு கவலைப்பட்டுட்டு இருந்தான்.. திவ்யாவிற்கும் நான் வெளியே போகணும்னு ஆசை’ என்று பொசசிவ் மோடில் அனத்திக்கொண்டிருந்தார் சான்ட்ரா.

இதன் மூலம் தன் கணவர், திவ்யாவை மட்டுமல்லாது தன்னைத்தானே சான்ட்ரா அவமானப்படுத்திக் கொள்கிறார் என்பதாவது அவருக்குப் புரியுமா? அதிலும் இந்தப் பஞ்சாயத்தை யாரிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார் பாருங்கள்! பாருவைப் பற்றி அவருக்குத் தெரியாதா? “ஒருத்தர் கஷ்டத்துல இருக்கும்போதுதான் பிரெண்டுன்றவங்ககூட நிக்கணும். திவ்யா அதைச் செய்யல” என்கிற மாதிரி பாரு ஏற்றி விட்டுக்கொண்டிருந்தார். உதவிக்கு வந்த திவ்யா என்ன பாடுபட்டார் என்று பாருவிற்குத் தெரியாதா? வெஷம். வெஷம்.

நாள் 64.

வேக்அப் பாடல் முடிந்து யோகா செய்து கொண்டிருந்த கனி, சபரியை வினோத் கிண்டல் அடித்தது சுவாரசியமான காட்சி. சம்பந்தப்பட்டவர்களேகூட இணைந்து சிரிப்பதுதான் நல்ல நகைச்சுவை.

ஆதிரை
ஆதிரை

ரீஎன்ட்ரி ஆதிரையுடன் அரோரா நட்பாக இருப்பது கம்முவிற்குப் பிடிக்கவில்லை. எனவே அந்தக் கூட்டணியின்மீது வன்மத்தைத் துப்பத் துவங்கிவிட்டார். பாருவின் சகவாசம்போல. எனவே காலையிலேயே அரோவை வம்புக்கு இழுத்து “நீ கிச்சன் டீம்ல இதுவரைக்கும் வந்ததே இல்லை” என்று ஆரம்பித்து “பிரவீன், துஷார் வெளியே போனதுக்கு நீதான் காரணம்.. பேமென்ட்டுக்காகத்தான் இங்க வந்தேன்னு சொன்னவதானே நீ?” என்றெல்லாம் கேள்வி குண்டூசிகளால் குத்தித் துளைத்து விட்டார்.

துஷார் எவிக்ஷனுக்கு அரோரா காரணம் என்று பேச்சை எடுத்தாலே, அரோரா எத்தனை ஹர்ட் ஆவார் என்பதை முன்பே பார்த்திருக்கிறோம். எனவே சரியாக அந்த இடத்தில் அடித்து குரூரமாக சந்தோஷப்பட்டார் கம்ருதீன். “ஏன் இப்படி ஹர்ட் பண்றீங்க. எதைச் சொன்னா எனக்கு வலிக்கும்ன்னு தெரிஞ்சு பண்றீங்க?” என்று கதறினார் அரோரா.

அரோரா மீது வன்மத்தைக் கொட்டிய கம்ருதீன்

‘உனக்காக அழுத பொண்ணை அழ வெக்காதீங்க” என்று அரோரா சொன்ன பன்ச் வசனம் உண்மை. கம்முவிற்கு ரெட் கார்டு கிடைக்கலாம் என்ற சமயத்தில் அழுத அரோரா, கம்முவை பல முறை மோட்டிவேட் செய்திருக்கிறார். இது கம்முவே மனதார ஒப்புக்கொண்ட விஷயம். இப்படி ஒரு நல்ல நண்பனாக இருந்த அரோவிற்கு கம்ருதீன் தரும் குரூரமான தண்டனை கேவலமான நடத்தையாக இருக்கிறது. ஆதிரையைப் பழிவாங்க அரோவை கருவியாக உபயோகப்படுத்திக் கொள்வதா?!

கம்ருதீனின் தாக்குதல் காரணமாக, அரோ காயப்பட்டதால் அவரைக் காப்பாற்றும் விதமாக ஆதிரை என்ட்ரி ஆனார். உடனே கம்முவிற்கு காண்டு அதிகமானது. ஆதிரை உள்ளே வந்ததால் கம்முவின் நண்பனான வினோத்தும் உள்ளே வந்தார். எனவே சூழல் ரணகளமானது.

கம்ருதீன் - வினோத்
கம்ருதீன் - வினோத்

“துஷார் வெளியே போனது நல்லதுதான். அதனாலதான் என் கூட பிரெண்டா இருக்க முடியுது’ன்னு நீ சொல்லல?” என்று அடுத்த வெடிகுண்டை அரோ மீது கம்ரூதின் வீச மன உளைச்சலின் உச்சத்திற்குச் சென்ற அரோ “ஏன் இப்படி வாயைத் திறந்தா பொய்யா சொல்ற.. நான் உனக்கு அப்படி என்ன பண்ணினே். உனக்கு நல்லதுதானே நெனச்சேன்?’ என்றெல்லாம் கண் கலங்கினாலும் ஆதிரை மீதுள்ள கோபத்தால் வன்ம மோடில் இருந்து இறங்காமல் இருந்தார் கம்மு.

“நீயெல்லாம் இதுக்குள்ள வராத.. அதனாலதான் உன்னை வெளியே அனுப்பிச்சிட்டாங்க..” என்று ஆதிரை மீதும் வன்மத்தைக் கொட்டினார் கம்மு. கூடவே பின்பாட்டுக்கு வினோத்.

வெளியில் வந்து அழுத அரோவிற்கு விக்ரம் தந்த அட்வைஸ் சிறப்பாக இருந்தது. “இது ஒரு கேம். ‘நான் போட்டியாளனா இப்படித்தான் பேசுவேன்’ன்னு கம்ருதீன் சொல்றது ஒருவகையில் சரிதான். இந்த கேம் இப்படித்தான் போகும். உன் பலவீனமான பாயின்ட்டுகளை வெச்சுதான் அடிப்பாங்க. இதுக்காகவெல்லாம் வெளியே போறேன்னு சொல்லாத. ஸ்ட்ராங்கா நின்னு விளையாடு” என்று உபதேசித்தார் விக்ரம்.

மக்கள் தெம்பாக சண்டைபோட நிறைய உணவுப் பொருட்களை அனுப்பியிருந்தார் பிக் பாஸ். ஸ்டோர் ரூமில் அவற்றைப் பார்த்தவுடன், திருடச் செல்லும் வடிவேலு.. ‘அய்.. பீரோலு.. அய். துணி…அய்யோ.. நகை.. யப்பா.. உன் மகன் இப்படி சம்பாதிக்கறத இருந்து பார்க்க உனக்கு கொடுத்து வைக்கலையே?” என்று பரவசத்துடன் கண்கலங்கும் காமெடியைப் போல மக்கள் ஆனந்தக் கண்ணீர் சிந்தினார்கள்.

அடுத்தது ‘தல’ டாஸ்க். இதுவரை நடந்ததிலேயே இதைத்தான் சுவாரசியமான மற்றும் நகைச்சுவையான டாஸ்க் என்று சொல்லலாம். போட்டியாளர்கள் அனைவரின் கண்களும் கட்டப்படும். பஸ்ஸர் அடிக்கும்போது பந்தின்மீது அமர்ந்திருக்கவேண்டும். அமராதவர் அவுட்.

ஆதிரை - விக்ரம்
ஆதிரை - விக்ரம்

கண்கள் கட்டப்பட்ட நிலையில் ஆடிய ஆட்டம் என்பதால், இருட்டு அறையில் கருப்பு பூனையைத் தேடுவதுபோல காமெடியாக நடந்தது. பலரிடமும் மோதி பந்தைப் பிடுங்க முயன்று நன்றாக ஆடினார் விக்ரம். ஆதிரை அதற்கும்மேலே மரம் ஏறுவது போல விக்ரமின் மீது ஏறி கடைசி வரை போராடினார். Good sport. சுபிக்ஷாவோ ஒரு மூலையில் பாதுகாப்பாக ஒளிந்துகொண்டார்.

சிரிக்கச் சிரிக்க நடந்து முடிந்த இந்தப் போட்டியில் அமித் வென்று அடுத்த வாரத்தின் ‘தல’ ஆனார். வெற்றி பெற்ற ரெட்ரோ சினிமா அணியில் இருந்தவர்கள் மட்டும் தகுதியாகி ஆடிய போட்டி இது. ஒருவேளை பாரு இந்தப் போட்டியில் கலந்து கொண்டிருந்தால், சிரிப்பாக மட்டும் முடிந்திருக்குமா?

பத்தாவது வாரத்திற்கான நாமினேஷன். கடந்த வார டாஸ்க்கில் வென்ற ரெட்ரோ சினிமா அணியினரை நாமினேட் செய்ய முடியாது. அனைவருக்குமே நாமினேஷன் ஃப்ரீ பாஸ் கிடைத்துவிட்டது. எனவே குறிப்பிட்ட போட்டியாளர்களின் மீது மட்டுமே குத்த முடியும்.

எந்த இருவரை நாமினேட் செய்கிறோமோ அவரது பெயரை ஒரு தாளில் எழுதி கதவுக்கு வெளியே தூக்கியெறிய வேண்டும் என்கிற டிசைன். வீட்டு தலயாக சரியாக செயல்படாதது மட்டுமல்லாமல், பொதுவாகவே மந்தமாக இருக்கிற ரம்யாவிற்கு நிறைய வாக்குகள். எல்லோருக்கும் நல்லவர் என்கிற போர்வையில் ஆடும் சபரிக்கும் கணிசமான வாக்குகள்.

இதுதவிர அவரவர்கள் தங்களின் பகையாளர்களின் மீதும் ஆவேசமாக குத்தினார்கள். ஆனால் கல்யாண வீட்டில் சாம்பாருக்கு அனைவருமே உப்புபோட மறந்த கதையாக, பாருவை விட்டுவிட அவர் எஸ்கேப். ‘மற்ற யாராவது குத்தியிருப்பார்கள்’ என்று நினைத்து அனைவருமே விட்டு விட்டார்கள் போல.

‘என்னது நான் லிஸ்ட்ல இல்லையா.. ஆச்சரியமா இருக்கே.. இது புதுசான ஃபீலிங்கா இருக்கே?” என்று அனைவருக்கும் இனிப்பு தந்து மகிழ்ந்தார் பாரு. ‘நல்லது செய்தேன்.. நன்றாக இருக்கிறேன்’ என்று பாரு சொல்லும் காட்சியையெல்லாம் பார்க்க நேர்ந்தது கொடுமை.

கனி, திவ்யா, அரோரா
கனி, திவ்யா, அரோரா

இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் ரம்யா, சான்ட்ரா, சபரி, கம்ருதீன், எஃப்ஜே மற்றும் வினோத்.

“நான் வந்ததுல எல்லா வாரமும் நாமினேட் ஆகியிருக்கேன்” என்று சான்ட்ரா கசப்பான பெருமிதமாக சொல்ல “நீ ஆறு மாசம்தான் ஜெயில்ல இருக்கே.. நான் பத்து வருஷமா இருக்கேன்’ என்பது மாதிரி பெருமையடித்துக் கொண்டார் ரம்யா.

இந்த முறை வீக்லி டாஸ்க் ‘வழக்காடு மன்றம்’. அதாவது கோர்ட் டாஸ்க். எனவே இந்த வாரம் ரணகளமாக இருக்கும் என்று தெரிகிறது. காதில் அடைத்துக்கொள்ள பஞ்சு வாங்கித் தயாராக இருக்கவேண்டும்.

நீண்ட நாள் நண்பருடன் நிச்சயதார்த்தம்; பிக் பாஸ் ஜூலி கரம் பிடிக்கப்போவது இவரைத்தான்!

சென்னையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்த நர்ஸ் மரியானா ஜூலியை, தமிழக அளவில் பிரபலமாக்கியது, கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம். தன்னெழுச்சியாக சென்னை மெரினாவில் திரண்ட அந்தக் கூட்டத்த... மேலும் பார்க்க

BB Tamil 9: "இவங்க என்ன கேம் விளையாடுறாங்கன்னு கூட்டிட்டு வந்தீங்க"- ஆதிரையுடன் மோதும் கம்ருதீன்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 63 நாள்களைக் கடந்திருக்கிறது. நேற்று(டிச.7) பிரஜின் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியிருக்கிறார்.BB Tamil 9இந்நிலையில் இன்று வெளியான இரண்டாவது புரொமோவில் கம்ருதீனுக்கு... மேலும் பார்க்க

Top Cooku Dupe Cooku 2: டைட்டில் வென்ற வில்லன் நடிகர்; இரண்டாவது இடம் யாருக்கு தெரியுமா?

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'டாப் குக்கு டூப் குக்கு' இரண்டாவது சீசனில் டைட்டில் வென்றிருக்கிறார் நடிகர் பெசன்ட் ரவி.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'குக்கு வித் கோமாளி'யைத் தயாரித்து வந்த மீடியா ம... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 63: ரம்யாவை வறுத்தெடுத்த விசே; சான்ட்ராவின் ஹைவோல்டேஜ் அழுகை டிராமா; என்ன நடந்தது?

ரெட்ரோ சினிமா அணியை ஜெயிக்க வைத்து, தனது அணியில் உள்ள அனைவரையும் காப்பாற்றிய பிரஜின், இந்த வாரத்தில் வெளியேற்றப்பட்டது சுவாரசியமான முரண்.எதிர்பார்த்தபடியே சான்ட்ரா கதறித் தீர்த்தார். பிரிவின் துக்கம் ... மேலும் பார்க்க

BB Tamil 9: "துஷார் போனதை வச்சு எத்தனை நாள் என்னை காயப்படுத்துவீங்க"- அரோரா, கம்ருதீன் மோதல்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 63 நாள்களைக் கடந்திருக்கிறது. நேற்று(டிச.7) பிரஜின் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருக்கிறார். இந்நிலையில் இன்று வெளியான முதல் புரொமோவில் இந்த வாரத்திற்கான நாமினேஷன... மேலும் பார்க்க