காவிரி ஆற்றில் வெளியேறும் உபரிநீரை ஏரி, குளங்களில் நிரப்ப வேண்டும்
Bigg Boss Tamil 8: மீண்டும் டபுள் எவிக்ஷன்; ஆனால்… ஒரு ட்விஸ்டை அரங்கேற்றிய பிக்பாஸ்!
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 8 எழுபது நாட்களைக் கடந்து விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. பதினெட்டுப் போட்டியாளர்களுடன் அக்டோபர் முதல் வாரம் தொடங்கியது நிகழ்ச்சி. சில வாரங்களுக்குப் பின் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் மேலும் ஆறு பேர் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றனர்.
அடுத்தடுத்த எவிக்ஷன் மூலம் ரவீந்தர், அர்னவ், வர்ஷினி, சுனிதா உள்ளிட்ட சிலர் வெளியேறினர்.
மேலும் இந்த சீசனின் முதல் டபுள் எவிக்ஷன் கடந்த வாரம் நிகழ்ந்தது. ஆர்.ஜே.ஆனந்தியும் சாச்சனாவும் கடந்த வாரம் வெளியேற பதினைந்து போட்டியாளர்கள் அந்த வீட்டில் இருந்தனர்.
இவர்களில் பெண் போட்டியாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.
இந்த சூழலில் இந்த வார எவிக்ஷனுக்கான ஷூட்டிங் இன்று காலை பிக்பாஸ் செட்டில் தொடங்கி தற்போது வரை போய்க் கொண்டிருக்கிறது.
இந்த வாரம் நிச்சயம் ஒரு ஆண் போட்டியாளர்தான் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
பவித்ரா, ஜாக்குலின், அருண் உள்ளிட்டோர் நாமினேஷன் பட்டியலில் இருந்த நிலையில் யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்டாக இந்த வாரமும் டபுள் எவிக்ஷனை அரங்கேற்றியிருக்கின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ரசிகர்களிடமிருந்து பெறப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் சத்யா, தர்ஷிகா இருவரும் எவிக்ட் ஆகியிருப்பதாக தற்போது வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களில் சத்யா வெளியேறிய எபிசோடு இன்றே ஒளிபரப்பாகலாமெனவும் எதிர்பார்க்கப் படுகிறது..
ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘அண்னா’ சீரியலில் நடித்து வந்த சத்யா பிக்பாஸ் வாய்ப்பு வந்ததும் அந்த தொடரிலிருந்து வெளியேறி பிக்பாஸ் சென்றார். இதுநாள் வரை அந்த சீரியலில் அவரது கேரக்டருக்குப் பதில் வேறு ஆர்ட்டிஸ்ட்டை கமிட் செய்யாமலிருந்தவர்கள் மிகச் சமீபத்தில்தான் இன்னொரு ஆர்ட்டிஸ்ட்டை கமிட் செய்தனர்.
தர்ஷிகா வெளியேறிய எபிசோடை நாளை பார்க்கலாமென்கிறார்கள். பொறுத்து இருந்து பார்க்கலாம்.!