"நான் குப்பைகளைச் சாப்பிடுவேன்" - புதுமையான நகரும் குப்பைத்தொட்டி பற்றி தெரியுமா...
Bigg Boss Tamil 8: "செளந்தர்யா ஓவரா நடிக்கிறாங்க; ஆனா தீபக் அண்ணா...'' - நவீன் வெற்றி பேட்டி
பிக் பாஸ் சீசன் 8 பரபரப்பாகச் சென்றுக் கொண்டிருக்கிறது.
தற்போது வீட்டில் அருணின் சத்தமே அதிகமாகக் கேட்கிறது. மற்றொரு பக்கம் இந்த வாரம் தன்னுடைய வழக்கமான ஜோனிலிருந்து வெளியே வந்திருக்கிறார் இந்த வார கேப்டன் ரஞ்சித். எதிர்பாராத டிவிஸ்ட்டாக கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்தது. இதன் பிறகுப் பலருடைய அட்டமும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த சீசனில் கலந்து கொண்டுள்ள தீபக், ரயன், ஜாக்குலின் ஆகியோருடன் இணைந்துப் பணியாற்றியிருக்கிறார் சீரியல் நடிகர் நவீன் வெற்றி. பிக் பாஸ் தொடர்பாக அவருடன் ஒரு சாட் போட்டோம்...
பிக் பாஸ் தொடர்பாகப் பேச தொடங்கிய நவீன் வெற்றி, "ஆடியன்ஸ் பார்வையிலிருந்து சொல்லனும்னா... இந்த வருட பிக் பாஸ் சீசன் கொஞ்சம் போர்தான். மற்ற சீசன்களைவிட இந்த சீசன் கொஞ்சம் சுவாரஸ்யம் குறைவாகதான் இருக்கு. தீபக் அண்ணா, ரயன், ஜாக்குலின்னு மூணு பேர் கூடவும் நான் வேலை பார்த்திருக்கேன். அவங்க பண்ற விஷயங்களெல்லாம் சுவரஸ்யமாக இருக்கு. பிக் பாஸ் வீட்டுக்குள்ள கண்டென்ட்காக எந்த விஷயம் பண்ணினாலும் என்றைக்காவது சுயரூபம் வெளிய வந்திடும். 100 நாள்கள் வீட்டுக்குள்ள இருக்க போறாங்க.
தீபக்கின் எமோஷனல் முகம்
அதுனால அவங்களால முழுமையாக நடிக்க முடியாது. அப்படி அருண் உடைஞ்சு வெளில வர்றாரு. மற்றொரு பக்கம் தீபக் அண்ணன் வெளில எப்படி இருந்தாரோ, அதே மாதிரிதான் வீட்டுக்குள்ள இருக்காரு. இப்போ பிக் பாஸ் வீட்டுக்குள்ள அவரோட எமோஷனல் பக்கத்தை என்னால பார்க்க முடியுது. அவர் எமோஷனலாகி நான் பார்த்தது இல்ல. இப்படி அளவாகச் சாப்பிட்டும் நான் பார்த்தது இல்ல. ஷுட்டிங் செட்ல அனைவருக்கும் அவர்தான் சாப்பாடு ஆர்டர் பண்ணிக் கொடுப்பார். ஜாக்குலின்கூட நான் `தேன்மொழி பி.ஏ' சீரியல்ல நடிச்சிருக்கேன். அவங்க வெளில எப்படி இருக்காங்களோ அதே மாதிரிதான் பிக் பாஸ் வீட்டுலையும் இருக்காங்க. அவரோட கேம்மை அவங்க விளையாடுறாங்க.
ரயன் வெளில எப்படி க்யூட்டாக மற்றவர்களிடம் செல்லமாக இருக்கிறாரோ, அதே மாதிரிதான் வீட்டுக்குள்ள இருக்கார். அந்த விஷயத்துல இருந்து ரயன் விளையாடணும். பர்சனலாக எனக்கு முத்துக்குமரன் விளையாடுறது பிடிச்சிருக்கு. அவருடைய பேசும் திறனும் எனக்குப் பிடிச்சிருக்கு. பவித்ரா நல்லா விளையாடுறாங்க. ஆனால், அவங்க பண்ற விஷயங்கள் வெளில தெரியமாட்டேங்குது. அவங்களுக்கான நேரமும் இப்போ வரும். அவங்க ரொம்ப டெடிகேட்டிவ்னு கேள்விபட்டிருக்கேன். மற்றொரு பக்கம் செளந்தர்யா கொஞ்சம் ஓவராக நடிக்கிறாங்கனு ஃபீல் பண்றேன்.
சல்மான் கான் - விஜய் சேதுபதி
இந்த வருஷம் புது ஹோஸ்ட் வந்திருக்கார். கமல் சார் இந்த நிகழ்ச்சிக்குனு ஒரு ஸ்டான்டர்ட் அமைச்சுட்டு போயிட்டாரு. அவருக்கு எல்லா விஷயங்களுமே தெரியும். நான் மற்ற மொழி பிக் பாஸும் பார்த்திருக்கேன். அதையெல்லாம்விட கமல் சார் நல்லா பண்றாரு. விஜய் சேதுபதி சார் நல்லா ரோஸ்ட் பண்றாரு. அவர் பண்றது இந்தியில சல்மான் கான் சார் பண்ற மாதிரியே இருக்கு. இந்தி பிக் பாஸ் பார்த்தவங்களுக்கு இந்த விஷயம் நிச்சயமாக கனெக்ட் பண்ணிக்க முடியும்." என்றார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...