செய்திகள் :

Bigg Boss Tamil 8: மீண்டும் டபுள் எவிக்‌ஷன்; ஆனால்… ஒரு ட்விஸ்டை அரங்கேற்றிய பிக்பாஸ்!

post image

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 8 எழுபது நாட்களைக் கடந்து விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. பதினெட்டுப் போட்டியாளர்களுடன் அக்டோபர் முதல் வாரம் தொடங்கியது நிகழ்ச்சி. சில வாரங்களுக்குப் பின் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் மேலும் ஆறு பேர் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றனர்.

அடுத்தடுத்த எவிக்‌ஷன் மூலம் ரவீந்தர், அர்னவ், வர்ஷினி, சுனிதா உள்ளிட்ட சிலர் வெளியேறினர்.

மேலும் இந்த சீசனின் முதல் டபுள் எவிக்‌ஷன் கடந்த வாரம் நிகழ்ந்தது. ஆர்.ஜே.ஆனந்தியும் சாச்சனாவும் கடந்த வாரம் வெளியேற பதினைந்து போட்டியாளர்கள் அந்த வீட்டில் இருந்தனர்.

இவர்களில் பெண் போட்டியாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

இந்த சூழலில் இந்த வார எவிக்‌ஷனுக்கான ஷூட்டிங் இன்று காலை பிக்பாஸ் செட்டில் தொடங்கி தற்போது வரை போய்க் கொண்டிருக்கிறது.

சத்யா

இந்த வாரம் நிச்சயம் ஒரு ஆண் போட்டியாளர்தான் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

பவித்ரா, ஜாக்குலின், அருண் உள்ளிட்டோர் நாமினேஷன் பட்டியலில் இருந்த நிலையில் யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்டாக இந்த வாரமும் டபுள் எவிக்‌ஷனை அரங்கேற்றியிருக்கின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர்களிடமிருந்து பெறப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் சத்யா, தர்ஷிகா இருவரும் எவிக்ட் ஆகியிருப்பதாக தற்போது வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களில் சத்யா வெளியேறிய எபிசோடு இன்றே ஒளிபரப்பாகலாமெனவும் எதிர்பார்க்கப் படுகிறது..

தர்ஷிகா - சிவகுமார்

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘அண்னா’ சீரியலில் நடித்து வந்த சத்யா பிக்பாஸ் வாய்ப்பு வந்ததும் அந்த தொடரிலிருந்து வெளியேறி பிக்பாஸ் சென்றார். இதுநாள் வரை அந்த சீரியலில் அவரது கேரக்டருக்குப் பதில் வேறு ஆர்ட்டிஸ்ட்டை கமிட் செய்யாமலிருந்தவர்கள் மிகச் சமீபத்தில்தான் இன்னொரு ஆர்ட்டிஸ்ட்டை கமிட் செய்தனர்.

தர்ஷிகா வெளியேறிய எபிசோடை நாளை பார்க்கலாமென்கிறார்கள். பொறுத்து இருந்து பார்க்கலாம்.!

BB Tamil 8 Day 68: சவுண்டு கொளுத்திப் போட்ட பட்டாசு; `ஜெப்ரி நடிக்கறார்ப்பா' - அம்பலப்படுத்திய சூரி

`நாமினேஷன் ஃப்ரீ பாஸ்’ ஜெப்ரிக்கு கிடைத்ததைப் போன்ற அபத்தம் வேறு எதுவுமே இருக்க முடியாது. நிர்வாகம் - தொழிலாளர் டாஸ்க்கில் ஜெப்ரி எங்குமே தெரியவில்லை. ஒருவருக்கு அனுதாபம் காட்டி வெற்றியை பரிசளிப்பதென்... மேலும் பார்க்க

`மீண்டும் ஒருவரை நம்பவும், என்னை நானே நேசிக்கவும்..!' - கணவர் வெற்றி வசந்த் குறித்து வைஷ்ணவி

`சிறகடிக்க ஆசை' வெற்றி வசந்திற்கும், `பொன்னி' வைஷ்ணவிக்கும் பெற்றோர்கள், நண்பர்கள் முன்னிலையில் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு இருவரும் பிசியாக அவரவர் தொடர்களில் நடித்துக் கொண... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 67: கண்ணீர் விட்ட சவுந்தர்யா; அருண் டார்ச்சர் குறித்து அனத்திய முத்து

இந்த எபிசோடில் எனக்குப் பிடித்த காட்சி என்னவென்றால் ‘இத்துடன் டாஸ்க் நிறைவு பெறுகிறது’ என்று பிக் பாஸ் அறிவித்ததுதான். போட்டியாளர்களைப் போலவே நாமும் ‘ஹப்பாடா’ என்று ஆனந்தக்கூச்சல் போடுமளவிற்கு அத்தனை ... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 8: "செளந்தர்யா ஓவரா நடிக்கிறாங்க; ஆனா தீபக் அண்ணா...'' - நவீன் வெற்றி பேட்டி

பிக் பாஸ் சீசன் 8 பரபரப்பாகச் சென்றுக் கொண்டிருக்கிறது.தற்போது வீட்டில் அருணின் சத்தமே அதிகமாகக் கேட்கிறது. மற்றொரு பக்கம் இந்த வாரம் தன்னுடைய வழக்கமான ஜோனிலிருந்து வெளியே வந்திருக்கிறார் இந்த வார கேப... மேலும் பார்க்க

Siragadikka aasai: புதிய வில்லி அறிமுகம்; முத்து எங்குச் சென்றார்? வரிசைக்கட்டும் பிரச்னைகள்

சிறகடிக்க ஆசை சீரியலின் கடந்த இரண்டு எபிசோடுகளில்,கல்யாண மண்டபத்துக்கு மீனா எடுத்த முதல் ஆர்டரை வெற்றிகரமாகச் செய்து முடிக்கிறார். கல்யாண மண்டபத்தின் மேலாளர் மீனாவைப் பாராட்டி அவரின் கட்டணத்தைக் கொடுக... மேலும் பார்க்க

FAMILY படம்: ``சீரியல்ல துணை நடிகையா இருக்கிற எனக்கு இந்த அங்கீகாரம் ரொம்பவே பெரிசு" - சுபிக்‌ஷா

’அழுத்தமான வேடத்தில் குறைவில்லாத நடிப்பை வழங்கியிருக்கிறார்’னு என்னைப் பத்தி இந்த வார ஆனந்த விகடன்ல எழுதியிருக்காங்க. சீரியல்கள்ல கூட மெயின் ரோல்ல இல்லாம சப்போர்ட் கேரக்டர்கள்ல நடிச்சிட்டிருக்கிற எனக்... மேலும் பார்க்க