Black Carrot : முதல் முறையாக கருப்பு கேரட் உற்பத்தியில் களமிறங்கும் நீலகிரி தோட்...
Bihar: 27 வாக்குகள் வித்தியாசத்தில் முதல்முறையாக எம்.எல்.ஏ ஆன JDU வேட்பாளர்; ஆட்சியமைக்கும் NDA!
பீகார் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. மாலை 6:30 நிலவரப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணி 88 இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது.
மேலும், 114 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. கிட்டத்தட்ட தாங்கள் மீண்டும் ஆட்சியமைப்பதை தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதி செய்துவிட்டது.
மறுமுனையில் மகாபந்தன் கூட்டணி 9 இடங்களில் வெற்றிபெற்று, மேலும் 25 இடங்களில் முன்னிலையுடன் படுதோல்வியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.
இந்த நிலையில், ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் ஒருவர் வெறும் 27 வாக்குகள் வித்தியாசத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தள வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறார்.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைதளப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டிருப்பதன்படி, சந்தேஷ் சட்டமன்றத் தொகுதியில் ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் ராதா சரண் ஷா 80, 598 வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.
இரண்டாம் இடம் பிடித்த ராஷ்ட்ரிய ஜனதா தள வேட்பாளர் திபு சிங், ராதா சரண் ஷாவை விட 27 வாக்குகள் குறைவாக 80,571 வாக்குகள் பெற்றார்.
இத்தொகுதியில், ஜன் சுராஜ் கட்சியின் வேட்பாளர் ராஜிவ் ரஞ்சன் ராஜ் 6,040 வாக்குகளுடன் மூன்றாம் இடம் பிடித்தார்.
2015 மற்றும் 2022-ல் பீகார் சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்த ராதா சரண் ஷா முதல்முறையாக எம்.எல்.ஏ ஆகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.














