Modi: "காங்கிரஸ்-முஸ்லிம் லீக் மாவோயிஸ்ட் காங்கிரஸாக (MMC) மாறிவிட்டது" - மோடி
Bihar Results: ``முழுக்க முழுக்க கட்சிக் கட்டமைப்பின் தோல்வி" - காங்கிரஸ் தலைவர் ஓப்பன் டாக்
பீகார் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (நவம்பர் 14) காலை முதல் நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி நிலவரப்படி 203 இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலையில் இருக்கிறது.
மகாபந்தன் கூட்டணி வெறும் 34 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி கிட்டத்தட்ட தனது வெற்றியை உறுதி செய்துவிட்டது.
பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில், இது சமூகநீதியின் வெற்றி என்றும், வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி என்றும் ட்வீட் செய்திருக்கிறார்.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவரும், நாகலாந்து, கேரளா ஆகிய மாநிலங்களின் முன்னாள் ஆளுநருமான நிகில் குமார், இது முழுக்க முழுக்க கட்சிக் கட்டமைப்பின் தோல்வி என்று கூறியிருக்கிறார்.
பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து தனியார் ஊடகத்திடம் பேசிய நிகில் குமார், ``இது எங்கள் கட்சிக் கட்டமைப்பின் பலவீனத்தைப் பிரதிபலிக்கிறது.
எந்தவொரு தேர்தலாக இருந்தாலும் ஒரு கட்சி அதன் கட்டமைப்பைத்தான் நம்பியிருக்கிறது. கட்சிக் கட்டமைப்பு பலமாக இல்லாவிட்டால், தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்குச் செயல்பட முடியாது, எல்லாமே பாதிக்கும்.
Patna, Bihar: On state Assembly elections, Congress leader and former Governor Nikhil Kumar says, "This reflects the weakness of our organization. In any election, a political party relies on its organizational strength. If the organization is weak and cannot function… pic.twitter.com/s0FMnjTytd
— IANS (@ians_india) November 14, 2025
எங்கள் வேட்பாளர்கள் அனைவரும் மிகவும் திறமையானவர்கள், ஆனால் இன்னும் சிறந்த வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.
இது முழுக்க முழுக்க கட்சிக் கட்டமைப்பின் தோல்வி. அது வலுவாக இருந்திருந்தால், எங்கள் வேட்பாளர்களின் முடிவு வேறுவிதமாக இருந்திருக்கும் என்பதை நான் உறுதியாகக் கூற முடியும்" என்று கூறினார்.













