Bihar Results: 243-க்கு கட்சிகள் எடுத்த மார்க் எவ்வளவு? 2020-க்கும் 2025-க்கும் ...
Bihar Results: 243-க்கு கட்சிகள் எடுத்த மார்க் எவ்வளவு? 2020-க்கும் 2025-க்கும் எவ்வளவு வித்தியாசம்!
பீகாரில் இன்று காலை முதல் நடைபெற்று வந்த வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தது.
தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தின் தரவுகளின்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களுடன் மாபெரும் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்திருக்கிறது.
மகாபந்தன் கூட்டணி 35 இடங்களில் வென்றிருக்கின்றன. மற்ற கட்சிகள் மொத்தமாக 6 இடங்களில் வென்றிருக்கின்றன.

கட்சி வாரியாக அதிக இடங்கள் வென்ற கட்சிகள்:
தேசிய ஜனநாயகக் கூட்டணி (202):
* பாஜக - 101 இடங்களில் போட்டியிட்டு 89 இடங்களில் வெற்றி.
* ஐக்கிய ஜனதா தளம் - 101 இடங்களில் போட்டியிட்டு 85 இடங்களில் வெற்றி.
* லோக் ஜன சக்தி (ராம் விலாஸ்) - 28 இடங்களில் போட்டியிட்டு 19 இடங்களில் வெற்றி.
* இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா - 6 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி.
* ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா - 6 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி.
மகாபந்தன் கூட்டணி (35):
* ராஷ்ட்ரிய ஜனதா தளம் - 143 இடங்களில் போட்டியிட்டு 25 இடங்களில் வெற்றி.
* காங்கிரஸ் - 61 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களில் வெற்றி.
* இந்திய கம்யூனிஸ்ட் (ML) (L) - 20 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் வெற்றி.
* மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 4 இடங்களில் போட்டியிட்டு ஒன்றில் வெற்றி.
* இந்திய இன்க்ளூஸிவ் பார்ட்டி (IIP) - 3 இடங்களில் போட்டியிட்டு ஒன்றில் வெற்றி.

Grand Democratic Alliance (5):
* அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) - 25 இடங்களில் போட்டியிட்டு 5-ல் வெற்றி.
இதர:
* பகுஜன் சமாஜ் கட்சி - 130 இடங்களில் போட்டியிட்டு ஒன்றில் வெற்றி.
* 238 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட பிரசாந்த் கிஷோரின் சன சுராஜ் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை.
2020 சட்டமன்றத் தேர்தலில் கட்சிகள் வெற்றிபெற்ற இடங்களின் எண்ணிக்கை:
* ராஷ்ட்ரிய ஜனதா தளம் - 75
* பாஜக - 74
* ஐக்கிய ஜனதா தளம் - 43
* காங்கிரஸ் - 19
* இந்திய கம்யூனிஸ்ட் (ML) (L) - 12

* AIMIM - 5
* இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா - 4
* விகாஷீல் இன்சான் பார்ட்டி (VIP) - 4
* இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) - 2
* மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) - 2
* பகுஜன் சமாஜ் கட்சி - 1
* லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) - 1
* சுயேச்சை - 1














