செய்திகள் :

Black Carrot : முதல் முறையாக கருப்பு கேரட் உற்பத்தியில் களமிறங்கும் நீலகிரி தோட்டக்கலைத்துறை!

post image

ஆரஞ்சு தங்கம் என வர்ணிக்கப்படும் கேரட் சாகுபடியில் நீலகிரி மாவட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சியின் போது ஊட்டியில் அறிமுகப்படுத்தப்பட்ட கேரட் சாகுபடி, மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவி தற்போது பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

கருப்பு கேரட் விதைப்பு

விவசாயிகள் மட்டுமின்றி பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களும் கேரட் பயிரை மட்டுமே சார்ந்துள்ளனர். வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கேரட் விதை 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. வீரிய ரக விதைகள்‌ மூலம் உற்பத்தி செய்யப்படும் கேரட்டுகளை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.

இந்த நிலையில், கருப்பு கேரட் சாகுபடிக்கான சோதனை முயற்சியில் முதல் முறையாக களமிறங்கியிருக்கிறது நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை. முதல் கட்டமாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள அரசு நாற்றாங்காலில் இந்த கருப்பு கேரட் விதைகளை விதைத்துள்ளனர்.

கருப்பு கேரட் விதைப்பு

இந்த முயற்சி குறித்து தெரிவித்த தோட்டக்கலைத்துறையினர் , " வழக்கமான ஆரஞ்சு நிறத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ' காலே கஜார்' எனப்படும்‌ இந்த கருப்பு கேரட் சாகுபடி மற்றும் பயன்பாடு

உத்திர பிரதேசம், ஹரியானா, பீகார், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் அதிகளவில் உள்ளன. நார்சத்து அதிகம் கொண்ட, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்த கேரட்டில் பீட்டா கரோட்டின், பொட்டாசியம், வைட்டமின் கே ஆக்ஸிஜனேற்றிகள் அதிகமாக உள்ளன.

மேலும், செரிமானத்தை அதிகரித்தல், ரத்த உறைதலை தடுத்தல், இயற்கை வண்ணமும் இதிலிருந்து பெறப்படுகிறது. டெல்லியில் இருந்து கருப்பு கேரட் விதைகள் பெறப்பட்டு முதல் முறையாக குன்னூர் சிம்ஸ் பூங்கா நாற்றங்காலில் தற்போது விதைக்கப்பட்டுள்ளது. மூன்றரை மாதத்தில் அறுவடைக்குத் தயாராகும்.

கருப்பு கேரட் விதைப்பு

இந்த முயற்சியின் விளைவை அடிப்படையாகக் கொண்டே அடுத்தக்கட்ட விரிவாக்கம் குறித்து முடிவு எடுக்கப்படும் " என்றனர். நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறையின் இந்த புது முயற்சி விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையேயும் எதிர்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.

பழமர சாகுபடியில் வெற்றி பெற, இதுதான் அச்சாணி... தரமான உரக்கலவை இப்படித்தான் தயார் செய்ய வேண்டும்...

தொடர்சில ஆண்டுகளுக்கு முன்பு, சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் நடவுக் குழிகள் எடுத்து, உடனடியாகப் பழமரக் கன்றுகளை நடவு செய்ததால், அவர... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: 'ஊதா, பச்சை அரிசி கிலோ ரூ.500' - ஜப்பான், இந்தோனேசியா நெல்ரகத்தை பயிரிடும் விவசாயி

மகாராஷ்டிரா விவசாயி ஒருவர் வித்தியாசமான முறையில் உலகில் பல்வேறு நாடுகளில் விளையும் அரிய வகை நெல் ரகங்களை இந்தியாவிற்குக் கொண்டு வந்து பயிரிட்டு வருகிறார்.மும்பை அருகில் உள்ள பன்வெல் என்ற இடத்தில் வசிக... மேலும் பார்க்க

தஞ்சை: முதல்வர் திறந்த நெல் கொள்முதல் நிலையம்; அதிகாரிகள் அலட்சியத்தால் செயல்பாட்டுக்கு வராத அவலம்!

த் டெல்டா மாவட்டத்தில் இந்த ஆண்டு சுமார் 6.50 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டிருந்தது. முன் எப்போதும் இல்லாத வகையில் விளைச்சலும் அமோகம். இந்நிலையில் அறுவடை செய்த நெல் கொள்முதல் செய்வதில் தாமத... மேலும் பார்க்க

`அரசிடம் எந்தத் திட்டமிடலும் இல்லை’ - நெல் கொள்முதல் விவகாரத்தில் யார் மீது தவறு? |In depth

'கஷ்டப்பட்டு அறுவடை பண்ணி மூட்டை கட்டுன நெல்லுக இப்படி முளைச்சு போயிருச்சே' - கடந்த சில தினங்களாக தமிழ்நாடு நெல் விவசாயிகளின் கதறல் இது.தமிழ்நாட்டில் 10 நாள்களுக்கு முன்பு தொடங்கிய வடகிழக்கு பருவமழை, ... மேலும் பார்க்க

புத்தரி அறுவடைத் திருவிழா: கொட்டும் மழையிலும் சிறப்பாக கொண்டாடிய பழங்குடிகள்! | Photo Album

புத்தரி அறுவடைத் திருவிழா!புத்தரி அறுவடைத் திருவிழா!புத்தரி அறுவடைத் திருவிழா!புத்தரி அறுவடைத் திருவிழா!புத்தரி அறுவடைத் திருவிழா!புத்தரி அறுவடைத் திருவிழா!புத்தரி அறுவடைத் திருவிழா!புத்தரி அறுவடைத் த... மேலும் பார்க்க

திருச்சி: "நெல்லின் ஈரப்பதத்தை அதிகப்படுத்த வேண்டும்" - மத்திய குழுவிடம் விவசாயிகள் கோரிக்கை

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை காரணமாக நெல் கொள்முதல் நிலையங்களிலும், விவசாயிகள் பயிரிட்ட நெல் பயிர்களிலும் அதிக அளவு மழை நீர் சேர்ந்து ஈரப்பதம் அதிகரித்துள்ளது. பல்வேறு இடங்களில் நெல் பயிர்கள் சாகுபட... மேலும் பார்க்க