CAG Report: தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் உயர்வு... எவ்வளவு தெரியுமா?!
நேற்று இந்திய தலைமை கணக்கு தணிக்கையகம் சில அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. அதில் ஒன்றான 2022-23 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் மாநில நிதிநிலை அறிக்கை படி,
2022 - 23 ஆண்டில், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.23.64 கோடியாக இருந்துள்ளது.
தமிழ்நாட்டின் வருமானத்தில் தொழிற்சாலை மற்றும் சேவைத் துறை முக்கிய பங்கு ஆற்றுகிறது. தேசிய அளவில் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் 56 சதவிகிதம் அதிகமாக உள்ளது. அதாவது, தேசிய அளவில் தனிநபர் வருமானம் ரூ.1.96 லட்சம் மட்டுமே. ஆனால், தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் ரூ.3.08 லட்சம் ஆகும்.
தமிழ்நாட்டின் வருமானம் 17 சதவிகிதம் உயர்ந்துள்ளது. வருமானம், தனிநபர் வருமானம் போன்றவை உயர்ந்துள்ளது போல, மாநிலத்தின் செலவுகளும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 10.88 சதவிகிதம் உயர்ந்துள்ளது. 2022-23 ஆண்டில் தமிழ்நாட்டின் செலவு ரூ.23.26 கோடி ஆகும்.
வருமான பற்றாக்குறை ரூ.2.46 கோடியில் இருந்து கிட்டதட்ட ரூ.36 கோடியாக மாறி 22 சதவிகிதம் குறைந்துள்ளது.
ஆனால், மாநிலத்தின் வரவை விட செலவு அதிகமாகத் தான் இருக்கிறது. இது மாநிலத்தின் மீது இருக்கும் நிதி அழுத்தத்தை காட்டுகிறது.