முதல்வர் பதவிக்கு எந்த போட்டியும் இல்லை: தேவேந்திர ஃபட்னாவிஸ்!
China: வாரத்திற்கு 3 நாள் ஆஸ்திரேலியா டு சீனாவுக்குப் பயணம்; காதலுக்காகக் கண்டம் தாண்டும் இளைஞர்!
சீனாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தனது கல்வி பாடங்களில் கலந்து கொள்வதற்காகவும், காதலியைச் சந்திப்பதற்காகவும், சீனாவிலிருந்து ஆஸ்திரேலியா வரை மூன்று மாத காலங்களாக வாரத்திற்கு மூன்று நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
காதலுக்காகக் கடல் கடந்து செல்வார்கள் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இவர் கண்டங்களைக் கடந்து சென்றிருக்கிறார். சீனாவைச் சேர்ந்த 28 வயதான Xu Guangli என்பவர் ஷேன்டாங்கில் வசித்து வருகிறார். Guangli தனது மேல் படிப்பினை Melbourneஇல் அமைந்துள்ள RMIT பல்கலைக்கழகத்தில் பயில்கிறார். இப்பல்கலைக்கழகம் ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ளது. தனது கல்லூரி படிப்பிற்காகவும் காதலியைச் சந்திப்பதற்காகவும் 11 வாரங்களாகச் சீனாவில் Dezhou பகுதியிலிருந்து ஆஸ்திரேலியாவிற்குச் சென்றுள்ளார். இந்த இளைஞரின் இச்செயல் அவர் கல்வி மேல் வைத்திருக்கும் ஆர்வத்தையும், காதலின் மேல் வைத்திருக்கும் அன்பையும் வெளிப்படுத்துகின்றன.
காலை 7 மணி அளவில் dezhou தனது பயணத்தைத் தொடங்கி, அங்கிருந்து ஜினான் வந்தடைவார். பின் விமானத்தின் மூலமாக மெல்போன்க்கு சென்று தனது கல்வி வகுப்பில் கலந்து கொள்வார். பின்னர் தனது காதலியுடன் நேரத்தைச் செலவிடுவதற்காக மீண்டும் சீனாவிற்கே திரும்பி விடுவார். இதனை அவர் ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 11 வாரங்களாக வாடிக்கையாகவே கொண்டுள்ளார்.
சிறிது தூரம் பயணம் செய்து கல்லூரிக்குச் செல்வதையே கடினமாக எண்ணுபவர்கள் மத்தியில், சிறிது கூட சோர்வடையாமல் அந்த ஒரே ஒரு வகுப்பிற்காக ஆயிரக்கணக்கான மைல்கள் கடந்து சென்று அசத்தி வருகிறார் இவர். இவ்வாறு ஒரு பயணம் மேற்கொள்வதற்கு மூன்று நாட்கள் எடுத்துக் கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் 8 வருடங்களாக ஆஸ்திரேலியாவில் படித்து வருகிறார் குவாங்ளி. அவருடைய காதலி ஆஸ்திரேலியாவில் மேல்படிப்பினை முடித்துவிட்டு தனது தாய் நாடான சீனாவிற்கே திரும்பிவிட்டார். குவாங்ளி தனது கல்லூரி படிப்பினையும் தனது காதலியும் இரு கண்களாக நினைத்து சமமான நேரத்தைச் செலவழித்துள்ளார். குவாங்ளியின் இத்தகைய முடிவினால் அவரால் தனது காதல் வாழ்க்கையையும் மேம்படுத்த முடியும் எதிர்கால வாழ்க்கைக்கும் நல்வழி கிடைக்கும்.
இது குறித்து குவாங்ளி கூறும்போது, "இது எனது கடைசி செமஸ்டர். இந்த டிகிரி படிப்பினைப் பூர்த்தி செய்ய இந்த வகுப்பு மிகவும் முக்கியமானது. எனது காதலி அவளது படிப்பை முடித்துவிட்டு சீனாவிற்குத் திரும்பி விட்டாள். ஆஸ்திரேலியாவில் எனது வாழ்க்கை முழுவதும் தனிமையே சூழ்ந்தது" எனக் கூறி உள்ளார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...