Maithili Thakur: `போஜ்புரி பாடகி to அரசியல்வாதி' - பீகாரின் இளம் MLA; யார் இந்த ...
Chirag Paswan: தீவிர நிதிஷ் எதிர்ப்பு டு மெகா வெற்றிக்கு உறுதுணை - பாய்ச்சல் காட்டிய சிராக் பாஸ்வான்
ூரியிருக்கிபீகார் சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இன்னும் அதிகாரப்பூர்வ வெற்றி அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், நிதிஷ் குமார் தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி, மொத்தமுள்ள 243 இடங்களில், சுமார் 200 இடங்களில் முன்னணி வகிக்கிறது.
இந்த தேர்தலின் மூலம் நிதிஷ் குமார் தன் ஆட்சியை தொடர்ந்து தக்க வைத்திருக்கிறார் எனக் கூறப்பட்டாலும், இன்னொரு இளம் அரசியல் தலைவரான சிராக் பஸ்வான் தனக்கான இடத்தையும் நிலைநிறுத்திக்கொண்டார் என்பதும் கவனிக்க வேண்டிய அம்சமாக உள்ளது.

யார் இந்த சிராக் பஸ்வான்?
பீகாரின் மாநிலக் கட்சியான ஜே.டி.(யு)-விலிருந்து பிரிந்துச் சென்ற ராம் விலாஸ் பஸ்வான், 2000 ஆண்டு லோக் ஜனசக்தி கட்சி என்ற புதியக் கட்சியைத் தொடங்கினார். எனினும் 2000-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு ராம் விலாஸ் பஸ்வான் காலமானார்.
அதைத் தொடர்ந்து கட்சி உட்கட்சிப் பூசலால் சிக்கலில் தவித்தது. இதன் பின்னர், சிராக் பாஸ்வான் வருகிறார். இதற்கிடையில், 2020 சட்டமன்றத் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியில் போட்டியிட்டார் நிதிஷ் குமார். அப்போது, எம்.பி-யாக இருந்த சிராக் பஸ்வான், நிதிஷ் குமருக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
நிதிஷ் குமார் VS சிராக் பஸ்வான்
ஜே.டி.(யு) போட்டியிட்ட தொகுதிகளில் தன் வேட்பாளர்களை நிறுத்தினார். சிராக் பஸ்வானால் பிரிந்த வாக்குகளால் ஜே.டி (யு) கட்சி அந்தத் தேர்தலில் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டாலும், என்.டி.ஏ கூட்டணிதான் வெற்றிப்பெற்று ஆட்சி அமைத்தது. நிதிஷ் குமார் முதல்வராக அரியணை ஏறினார்.
130 தொகுதிகளில் போட்டியிட்ட சிராக் பஸ்வான் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றிப்பெற்றார். அப்போது முதல், சிராக் பஸ்வானுக்கும் - நிதிஷ் குமாருக்குமான மோதல் தொடர்ந்தது. பீகார் அரசியலில் ஒரு மகத்தானவராகக் கருதப்படும் ராம் விலாஸ் பாஸ்வானின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் ஆற்றல் சிராக் பஸ்வானிடம் இல்லை என அரசியல் ஆய்வாளர்கள் பலரும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

புதிய கட்சியின் தலைவர்
இந்த நிலையில்தான், லோக் ஜனசக்தி கட்சி இரண்டாகப் பிரிந்தது. எனவே, சிராக் பஸ்வான் தனி ஆளாக லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ் பஸ்வான்) என்றப் புதியக் கட்சியை 2021-ம் ஆண்டு தொடங்கினார்.
சிராக் பஸ்வான் மற்றும் அவரது கட்சியின் மற்ற உறுப்பினர்களின் கடின உழைப்பு 2024 மக்களவைத் தேர்தலில் பலனளித்தது. போட்டியிட்ட ஐந்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று, 100% வெற்றி விகிதத்துடன் ஒரு தீவிர அரசியல் கட்சியாக லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தன்னை நிலைநிறுத்திக் கொண்டது.
இந்த சூழலில்தான் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. மக்களவைத் தொகுதியில் 100 சதவிகிதம் வெற்றியைப் பரிசளித்தாலும், சட்டமன்றத் தேர்தலில் 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளை வழங்குவதற்கு என்.டி.ஏ கூட்டணி முன்வரவில்லை.
இதனால் அதிருப்தியில் இருந்த சிராக் பஸ்வான், இந்தியா கூட்டணியில் இணையவிருப்பதாகவும் செய்திகள் வெளியானது. பின்னர் சிராக், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
இறுதியில் என்.டி.ஏ கூட்டணி சிராக் பஸ்வானுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவருக்கு 29 தொகுதிகளை ஒதுக்கியது. அதில் தற்போது 20 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை(3 மணி நிலவரப்படி) வகித்து வருகிறார் சிராக் பஸ்வான். இதன் மூலம் லோக் ஜனசக்தி கட்சிக்கான தலைவராக தன் திறமையை மீண்டும் நிருபித்திருக்கிறார் என்ற பேச்சு எழுந்திருந்திருக்கிறது.
அடுத்து என்ன?
சிராக் பஸ்வான் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே, துணை முதல்வர் பதவிக்கு போட்டியிடுவதாகவும், மாநிலத்தின் மிக உயர்ந்த பதவியில் தன்னைப் பார்க்க தனது கட்சித் தொண்டர்கள் விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக அவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்திருந்த பேட்டியில், ``2025-ம் ஆண்டில் முதல்வர் பதவி காலியாக இருக்காது. அதே நேரம் கட்சித் தொண்டர்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன்.
அவர்கள் தங்கள் தலைவரை மிக உயர்ந்த பதவியில் பார்க்க வேண்டும் என விரும்புவதை நான் புரிந்துகொள்கிறேன். உங்கள் தொண்டர் உங்களால் உயர் பதவியை அடைய முடியும் என்று நம்பவில்லை என்றால், நீங்கள் அவர்களை ஊக்குவிக்கத் தவறிவிட்டீர்கள் என்று அர்த்தம்.

என் தந்தை ராம் விலாஸ் பாஸ்வான் பிரதமராக வேண்டும் என்று நான் எப்போதும் விரும்பினேன். என் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் முதலில் ஒரு நிலையைக் கடந்து, பின்னர் அடுத்த உத்தியை முடிவு செய்வேன்.
பீகார் தேர்தலுக்குப் பிறகு, 2027-ல் உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாப் தேர்தல்கள் வருகிறது. பின்னர் 2029 மக்களவைத் தேர்தலில், எனது பிரதமர் நான்காவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்படுவதைக் காண விரும்புகிறேன். பின்னர் 2030-ல் கவனம் செலுத்துவோம்" எனத் தன் அடுத்தடுத்த திட்டங்களையும் கூறியிருக்கிறார். இந்த நிலையில்தான் அவரின் வெற்றி பீகார் தேர்தல் வரலாற்றில் கவனம் பெற்றிருக்கிறது. குறிப்பாக, என்.டி.ஏ கூட்டணியின் அமோக முன்னிலையில், சிகாக் பாஸ்வானின் பங்கும் மிக முக்கியமானது. காரணம், ஒரு பக்கம் I.N.D.I.A கூட்டணியில் தேஜஸ்வி யாதவ் இளைஞர்களின் முகமாக முன்னிறுத்தப்பட்டார். என்.டி.ஏ கூட்டணியில் அப்படியான முகம் இல்லாமல் இருக்க, சிகாக் பாஸ்வான், இளைஞர்கள் வாக்குகளை கவர முன்னிறுத்தப்பட்டார். தற்போது அதற்கு பலன் கிடைத்திருப்பதாக தெரிவிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.













