செய்திகள் :

CO2-ஐ உணவாக மாற்றிய சீன விஞ்ஞானிகள்; உலகைத் திருப்பிப் போடும் அறிவியல் கண்டுபிடிப்பு; பின்னணி என்ன?

post image

சீன ஆராய்ச்சியாளர்கள், மெத்தனாலை வெள்ளை சர்க்கரையாக மாற்றும் புதுமையான முறையைக் கண்டுபிடித்து, கரும்பு அல்லது சர்க்கரை வள்ளி வளர்ப்பதற்கு மாற்றாக ஒரு தீர்வை வழங்கியுள்ளனர்.

உயிரி மாற்ற முறையைப் பயன்படுத்தி, பெறப்பட்ட கார்பன் டை ஆக்ஸைடை உணவாக மாற்ற முடியும் என இந்த ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது.

தியான்ஜின் தொழில்துறை உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள், மெத்தனாலில் இருந்து சுக்ரோஸ் (வெள்ளை சர்க்கரை) தயாரிக்கும் ஒரு இன் விட்ரோ பயோட்ரான்ஸ்ஃபர்மேஷன் (ivBT) முறையை உருவாக்கியுள்ளனர்.

தொழிற்சாலை கழிவுகள் அல்லது கார்பன் டை ஆக்ஸைடில் இருந்து பெறப்படும் மெத்தனாலை நொதிகள் மூலம் சுக்ரோஸ் (வெள்ளை சர்க்கரை) ஆக மாற்றுகின்றனர்.

"கார்பன் டை ஆக்ஸைடை உணவாகவும், வேதிப்பொருட்களாகவும் மாற்றுவது, சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்னைகளைத் தீர்ப்பதுடன், கார்பன் நடுநிலைமையை அடைய உதவும்" என சயின்ஸ் புல்லட்டின் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.

2021இல் டாலியன் வேதியியல் இயற்பியல் நிறுவன விஞ்ஞானிகள், கார்பன் டை ஆக்ஸைடை மெத்தனாலாக மாற்றும் முறையை உருவாக்கினர். இதை அடிப்படையாகக் கொண்டு, தியான்ஜின் குழு 86% மாற்று விகிதத்துடன் சுக்ரோஸ் (வெள்ளை சர்க்கரை) மற்றும் மாவுச்சத்து தயாரித்தது. பாரம்பர்ய முறைகளை விடக் குறைவான ஆற்றல் இதற்குப் பயன்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

ஆரம்ப வெற்றியின் அடிப்படையில், இந்த ivBT முறையை மாற்றி, ஃப்ரக்டோஸ், அமைலோஸ், அமைலோபெக்டின், செல்லோபையோஸ் மற்றும் செல்லோஒலிகோசாக்கரைடுகள் உள்ளிட்ட பல்வேறு கூறுகளை உருவாக்க முடிந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நூற்றாண்டின் இறுதியில் உலக மக்கள் தொகை 10 பில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுவதால், உணவு தேவை இரு மடங்காக அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தக் கண்டுபிடிப்பு எதிர்காலத்தில் உதவலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Humboldtine: 75 ஆண்டு பழைய கடிதம் மூலம் கண்டறியப்பட்ட அரிய வகை கனிமம்; எப்படித் தெரியுமா?

75 ஆண்டுகள் பழமையான ஒரு கடிதம், அறிவியல் உலகில் புதிய கண்டுபிடிப்புக்கு வழிவகுத்துள்ளது. ஹம்போல்டைன் எனப்படும் அரிய கனிமம் குறித்த ஒரு கடிதம், 2023 ஆம் ஆண்டு பவேரிய சுற்றுச்சூழல் நிறுவனத்தின் திட்டத்த... மேலும் பார்க்க

உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி கண்டுபிடிப்பு: கடலுக்கு அடியில் மறைந்திருக்கும் அதிசயம்!

விஞ்ஞானிகள் உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியைக் கண்டறிந்துள்ளனர். ஆனால், இது வழக்கமான நீர்வீழ்ச்சி போன்றில்லாமல் கடலின் அடியில் பாய்கிறது. டென்மார்க் மற்றும் கிரீன்லாந்துக்கு இடையேயான கடலுக்கு அடியில் ... மேலும் பார்க்க

"விண்வெளி மையத்திலிருந்து பூமி திரும்பும் 'முதல்' இந்தியர் சுபான்ஷு சுக்லா" - பிரதமர் மோடி வாழ்த்து

ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்ல இந்தியாவின் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவை சேர்ந்த பெக்கி விட்சன், ஹங்கேரியை சேர்ந்த திபோர் கபு, போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகி... மேலும் பார்க்க

சீனா: 2 ஆண் எலிகளின் DNA மூலம் குட்டிகளை உருவாக்கிய விஞ்ஞானிகள்.. ஆராய்ச்சி சொல்வதென்ன?

சீனாவில் உள்ள விஞ்ஞானிகள் ஆண் எலிகளின் DNA-க்களை எடுத்து, எலிக் குட்டிகளை உருவாக்கியுள்ளனர். பின்னர் இந்த எலிகள் வளர்ந்து, பெண் எலிகளுடன் சேர்ந்து குட்டிகளைப் பெற்றெடுத்துள்ளது.ஷாங்காய் ஜியாவோ டோங் பல... மேலும் பார்க்க